பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO நினைவு அலைகள்

அவர் நிலை என்ன? மாவட்டக்கல்வி அலுவலர் நிலையே.

அக் காலத்தில், துணை இயக்குநர் பதவி பெரிய பதவியல்ல.

இருப்பினும் நேரே எழுதக்கூடாது என்று அதிகார ஆணவம் குட்டிற்று.

எனினும் பலருக்கு உதவுகிறோமென்ற நிறைவில், அக் குட்டினைப் பொருட்படுத்தவில்லை.

சேலத்துக்கு மாற்றல்

சில நாள்கள் கழிந்தன. தந்தி ஒன்று வந்தது. என்னைச் சேலம் மாவட்டக்கல்வி அலுவலராக மாற்றி இருப்பதாக அது கூறிற்று.

வழக்கமாகவுள்ள பயணக்காலம் எடுத்துக் கொள்ளாமல், விரைந்து சென்று, சேலத்தில் சேரும்படி கட்டளையிட்டது.

‘பொதுக்கல்வி இயக்குநர் சொல்லுக்கு இவ்வளவுதானா மதிப்பு: துணை இயக்குநர், காதைத் கடித்திருப்பாரோ?’ இப்படி , திகைத்தேன்.

14. சேலத்துக்கு மாற்றல்

‘சேலத்திற்கு மாற்றியிருப்பது ஒரு வகையில் நன்மை; வேறொரு வகையில் தீமை. இயக்குநர் நேரில் சொல்லியபடி மூன்றாண்டு காலம், சீகாகுளத்தில் இருந்தால் தெலுங்குத் தேர்வை முடித்துவிட்டு இருக்கலாம். -

‘சேலத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம்; எப்படியே இருக்கட்டும். சேலம் நம் ஊர்போல; அங்குச் செல்வதற்கு ஆயத்த மாகுங்கள்’ என்று என் மனைவி கூறினார்.

அதுவும் சரியாகத் தோன்றிற்று. போராதரவுப் பணியில் என் மனைவி, பெண் சொற்பொழிவாளராகப் பணி புரிவது கெட்டுப் போகுமே என்று எண்ணியபோது கலக்கம் ஏற்பட்டது.

‘சேலம் மாவட்டத்திலும் அத்தகைய பதவியிருக்கலாம். அப்படி இருந்தால் அங்கு அப் பதவியை ஏற்றுப் பணிபுரியச் சித்த மாப் இருப்பதாக, நீங்கள் மனுச்செய்துகொள்ளலாம்’ என்று நண்பர் ஒருவ ஆலோசனை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/116&oldid=622970" இலிருந்து மீள்விக்கப்பட்டது