பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A.

நெ.து. சுந்தரவடிவேலு என்னும் ஆல விதையைக் காலமும், சூழலும், தொலை நோக்காளரும், அறவோரும் பயன்படுத்தி, தொண்டு மரமாக வளர்த்து விட்டார்கள்.

கோடிக் கணக்கான மக்கள் கொண்ட மாந்தர் இனத்தில் நான் ஒருவன்; சிறியேன். சிறியேன் எப்படிப் பெரியவன் ஆனேன்?

தன்னலங் கருதாத் தொண்டால்; பயன் கருதாப் பணியால்; ஒருமனப்பட்ட ஈடுபாட்டால்; இன்பம் விழையாமையால், இடும்பை இயல்பென உணர்ந்தமையால்; தியாக மலைகளை வழிகாட்டிகளாகக் கொண்டமையால்; ஒரு சில செய்ய முடிந்தது.

படிப்பையே மறந்திருந்த, தமிழ் மக்களிடையே, ஆண்டுக்கு ஆண்டு பெருகி வரும் கல்விப் பசியை வளர்க்கும் திருத்தொண்டில் எனது வாழ்நாளில் முப்பந்தைந்து ஆண்டுகள் நிறைவுபெற்றன.

‘குடிசை வாழ்வோரெல்லாம், உரிமையோடு உங்களிடம் வந்து, மேல்பட்டப் படிப்பிற்கு இடம் பெற்றுக் கொண்டு போக முடிகிறதே! இதனால்தான் உங்களைத் தேடுகிறேன்’ என்று அன்று தந்தை பெரியார் கூறிய பாராட்டுக்கு ஈடு எது?

இந்திய சோவியத் நட்புறவை வளர்க்கும் நற்பணியில் பதினைந்து ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.

வாய்ப்புகள் தந்த தரும் பட்டறிவு சமுதாயத்தினுடைய பொதுச்சொத்து. எனவே நினைவு அலைகள் பலர் புகழ்பாடும் நூலாக உருவாகி வருகிறது.

எனக்கு எழுச்சியூட்டிய இயக்கங்கள் என் சிந்தனைகளை வளர்த்த அறிஞர்கள், என் மனிதாபிமானத்தை வளர்த்த பெரியோர்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

சிறுவர்களுக்கான பதின்மூன்று நூல்களையும், வயது வந்தவர்களுக்காக முப்பதுக்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றும் பேறு பெற்றேன். இத்துணை நூல்களையும் எழுதும்படி தூண்டியவர்கள் சிலர். அவர்களில் முன்னே நிற்பவர், சத்ய கங்கை’ மாத மிருமுறை இதழ் ஆசிரியரும் என் இனிய நண்பருமான திரு. பகீரதன் ஆவார். அவர் இடம் கொடுத்துக்கொண்டிருப்பதால் இந்நூல் வெளிவர முடிந்தது. அவருக்கு நன்றி! நன்றி! நன்றி!

தயமான தமிழ் நூல்களை வெளியிட்டு மகிழும் திரு. வானதி திருநாவுக்காக என்னுடைய நூல்கள் பலவற்றை வெளியிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/12&oldid=622981" இலிருந்து மீள்விக்கப்பட்டது