பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நினைவு அலைகள்

அதற்கு முன்னுரையிலேயே நன்றி தெரிவித்தார், பாரதிதாசன்.

இது, அக்காலப் பொது வாழ்க்கை எப்படி விளங்கியது என்பதற்கு, ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

இளமையில், மிடுக்கோடும் துடுக்கோடும் வாழ்ந்தவர் திரு.வி.க.

‘சொல்லுக்குச் சொல்; கல்லுக்குக் கல்; மல்லுக்கு மல் என்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்.

அத்தகையோர், ஆன்றவிந்து அடங்கிய சான்றோராக ஒளிவி , துணை நின்றவை எவை?

திரு.வி.க.வின் இல்லற வாழ்க்கை; அவர் ஏற்றுக்கொண்ட இன்னா செய்யாத காந்திய நெறி; சமகாலத் தலைவர்களின் உயர்ந்த பண்பாடு

சோவியத் நட்பை வளர்த்தார்

தமிழ் நாட்டில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சோவியத் நட்புறவை வளர்த்த பெரியோர்களில் திரு.வி.க.வும் ஒருவ ஆவார்.

நிதியேற்க மறுத்தார்

துய்மைக்கு, எளிமைக்கு, பொறுமைக்கு, உயிர் விளக்காக வாழ்ந்தவர் திரு.வி.க. பொதுத்தொண்டினை, அறவிலை வாணிகமாக மாற்றிக்கொள்ளாதவர்; தம் மணி விழா பெயரால், அன்பளிப்பு என்ற பெயரால், எவரும் உதவுவதற்கு இடங் கொடுக்க வில்லை.

முதுமையும் நோயும் திரு.வி.க. வோடு தோழமை கொண்டு, அவரைப் படுக்கையில் கிடத்தி இருந்தபோது, செல்வம் கொழித்த தமிழ் அன்பர் ஒருவர், வலிய அனுப்பிய காசோலையைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்த திரு.வி.க. எப்படி ப் பிறரிடம் கையேந்துவார்?

1947இல் சென்னை பி. அண்ட். சி ஆலையில் வேலை நிறுத்தம். அதற்கு திரு.வி.க. வழிகாட்ட, ஆத்திரங் கொண்ட நம் அாக, அவரை வீட்டுச் சிறைக்கு ஆளாக்கியது.

நானா பக்கங்களிலும் கண்டனம் எழவும் அக் கொடுமை நீக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/128&oldid=623019" இலிருந்து மீள்விக்கப்பட்டது