பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நினைவு அலைகள்

பயிற்சியை வெற்றிகரமாக முடித்துத் திரும்பிய திரு. இராமசாமி கவுண்டரைக் கல்லூரி முதல்வராகவே நியமித்தனர்.

ஆனால் ஒரு நிபந்தனை; தகுதி பெற்ற இஸ்லாமியர் வந்தால், அவருக்கு முதல்வர் இடத்தைக் கொடுத்துவிட்டு, பேராசிரியர் பணிக்கு மாறிவிடவேண்டும் என்பது நிபந்தனை.

அதற்கு உடன்பட்டு, திரு. இராமசாமி கவுண்டர் கல்லூரி முதல்வர் ஆனார்.

மூன்றாண்டுப் பணி அனுபவமே உடையவர்; ஆயினும் திரு இராமசாமி கவுண்டர், வெற்றிகரமான முதல்வராக விளங்கினார்: திறமையான கணக்குப் பேராசிரியர் என்று புகழ் பெற்றார்.

ஒராண்டு முதல்வராக இயங்கிய பிறகு இஸ்லாமியர் ஒருவர் கிடைத்தார். அவரை வானியம்பாடி கல்லூரி முதல்வர் ஆக்கினர்.

அவ்வேளை பார்த்து, சேலம் கல்லூரி முதல்வர் பதவி காலியாயிற்று.

நகர அவையர் திரு. இராமசாமி கவுண்டரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இளைஞர் முதல்வராவதா?

இருபத்தேழு வயதுடைய இளைஞரை சேலம் நகர் மன்றம் கல்லூரியின் முதல்வராக நியமித்தார்கள்.

வாதப் புயல் கிளம்பிற்று. இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண் முதல்வரை, இந்துக்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை இத்தனைக்கும் இராமசாமி கவுண்டர் வெளிப்படையான வைணவர். முழு நாமம் நெற்றியில் துலங்க இஸ்லாமியக் கல்லூரியில் வெற்றிகரமாகப் பணி புரிந்தவர்.

இந்துக்கள் ஆயிரம் சிதறல்களாக உடைத்த தேங்காய்க்கு ஒப்பானவர்கள்.

ஒருவரை இன்ன சாதி'யைச் சேர்ந்தவர் என்று கருதி விட்டால், பல சாதியார் தேவையற்றுப் பகைப்பதும், சில சாதியார் ஏனோ தானோ என்று வேடிக்கை பார்ப்பதுமே நம் வரலாறு.

பொறுப்புக்கு வந்தவர்கள், செயல்பட ஒரளவு வாய்ப்பாகிலும் கிடைத்தபிறகு எதிர்ப்போம் என்கிற பொறுப்பு உணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ளாத அழுக்காறு சமுதாயம் ஆயிற்றே, இந்து சமுதாயம்.

திரு. இராமசாமி கவுண்டர் சேலம் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டதைப் பற்றி வாதப்புயல் கிளம்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/132&oldid=623024" இலிருந்து மீள்விக்கப்பட்டது