பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தரவடிவேலு 117

‘திரு கவுண்டருக்கு வயது போதாது’ என்று கூச்சலிட்டது ஒரு கூட்டம்.

சிலர் நினைத்தால் கடுகைப் பெருமலையாக மிகைப்படுத்திக் காட்ட முடியும்.

அத்தகையோர், சேலம் கல்லூரி முதல்வர் பதவியை அறுபது ாழுபது ஆண்டுகளாக அனுபவித்து வந்தார்கள்

அவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு வேறொரு ‘பிரிவு க்குப் போவதைக்கூடப் பொறுக்க மனம் இல்லை. ஆன்மீகத்தைப் பற்றி வானளாவ அளக்கும் இந்துக்களுக்கு.

கல்லூரி முதல்வர் நியமனம் பற்றி எழுந்த வாதப்போர், பார்ப்பனர், அல்லாதார் போட்டியை, பகையை, ஊதி ஊதி வளர்த்தது; பல்லாண்டுகள் அதைப் பரவும்படியும் செய்தது.

இப்படித்தான் இந் நாட்டு அறிவாளிகள், சிறு சிறு நியமனங்களைக்கூடத் தத்தம் வட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல், அவ்வப்போது வெறுப்புப் பகைத் தீயை மூட்டி வளர்க்கிறார்கள்.

1927ஆம் ஆண்டில் திரு. இராமசாமி கவுண்டர் முதல்வர் ஆவதா ான்று எழுப்பிய எதிர்ப்பு, 1944ஆம் ஆண்டிலும் சேலத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்ததை நான் உணர்ந்தேன்.

கல்லூரி வரை ஊர்வலம்

வீண் வாதம் எழாதிருந்தால் திரு. இராமசாமி கவுண்டர் சாதாரணமாக, காதும்காதும் வைத்தாற்போல் வேலையில் சேர்ந்திருப்பார்.

பாடமுண்டு, கல்லூரிப் பணியுண்டு என்று மூழ்கியிருந்திருக்கக் கூடும்.

மாரில் சிலர், தொலைநோக்கின்றி, எழுப்பிய எதிர்ப்பால் பலர் வலியவந்து, திரு. இராமசாமியாருக்குப் பேராதரவு தரும் நிலை உருவாகியது.

திரு. இராமசாமி கவுண்டர், சேலத்தில் பணியேற்க வந்து இறங்கியபோது, செவ்வாய்ப்பேட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து, ‘சாரட்"டில் இருத்தி, கல்லூரி வரை அவரை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/133&oldid=623025" இலிருந்து மீள்விக்கப்பட்டது