பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நி னைவு அலைக கள்

ஒரு நாள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர்.எம். சுந்தரம், அய்.சி.எஸ். சும் மற்றுமிருவரும் கல்லூரி முதல்வரோடு சீட்டாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது திரு. சுந்தரம்

‘என்ன, கவுண்டர் சார்! நீங்கள் ஒரு மணி நேரம் பூசை செய்கிறீர்களாமே! என்னதான் வேண்டிக்கொள்ளுவீர்கள்?’ என்று கேட்டார்.

கல்லூரி முதல்வர் அமைதியாக - “எங்கள் மக்களுக்குச் சுறுசுறுப்பைக் கொடு; வாழக் கற்றுக் கொடு, ஒற்றுமை உணர்வை வழங்கு: அழுக்காறு அற்ற போக்கைக் கற்பி ஒருநிலை உணர்வை அருள்புரி என்று வேண்டிக்கொள்வேன்’ என்று பதில் சொன்னார்.

இப்படி வந்த பதிலைக் கேட்டு, நண்பர்கள் திகைத்தார்கள். ‘என்ன கிண்டலா பண்ணுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘இல்லாதவற்றைக் கேட்கத்தானே இறை வழிபாடு. இருப்பதைக் கேட்பது வீண்தானே!

‘எங்கள் மக்களுக்கு அழுக்காறு குறைந்து, ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதைக் கைவிட்டுவிட்டால், நாங்களும் உங்கள் அளவு வளர்ந்துவிடுவோம்.

‘தான் வளர்வதில் காட்டுகிற முனைப்பைக் காட்டிலும் அடுத்தவனை மட்டந்தட்டுவதில் காட்டும் ஆர்வம், என்புருக்’. நோயாகத் தொல்லைப் படுத்துகிறதே! என்றார். என்ன சொல்வார்கள்?

என் அலுவல்கள்

அலுவல் பற்றி, மாவட்டக் கல்வி அலுவலர்க்கும் மாவட் ஆட்சிக்குழுத் தலைவருக்கும் அடிக்கடி தொடர்புகள் ஏற்படும். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரங்கள் அவ்வப்போது வரும்.

மாவட்டஆட்சிக்குழு நடத்தும் தொடக்கப் பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் படிப்போர் வருகை அதிகம் ஆகும்போது, கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.

அதற்கென ஒரு வாய்பாடு இருப்பினும் பள்ளி ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில்,கல்வி அலுவலரின் பரிந்துரையைப் பெற்ற பிறகே கூடுதல் ஆசிரியரை நியமிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/140&oldid=623033" இலிருந்து மீள்விக்கப்பட்டது