பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெ. சுந்தரவடிவேலு 125

அதேபோல், மாவட்டக்கழக உயர்நிலைப் பள்ளிகளில் வருகை பெருகி, கூடுதல் ஆசிரியர் தேவைப்பட்டாலும், தேவைப்படும் ஆசிரியர்களை நியமிக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் தேவை.

உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில், மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். அது என்ன?

கூடுதலாக நியமிக்க வேண்டிய ஆசிரியர், என்ன பாடம் கற்பிக்கத் தகுதி உடையவராக இருக்கவேண்டும் என்பதையும் நன்கு கவனித்து முடிவு செய்யவேண்டும்.

இந்த முடிவு செய்யும் பொறுப்பு கல்வி அலுவலருடையதாகும். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, மாவட்ட ஆட்சிக்குழுத் தலைவர்களாக இருந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பெரும்பாலும் மாவட்டத்தின் வழி வழி பெரிய குடும்பங்களில் ஒருவராக இருப்பார். நம் வீட்டுப் பணத்தைச் செலவு செய்து, பொதுத் த்ொண்டு ஆற்றுபவர்களாக அநேகர் இருந்தனர்.

இருப்பினும் அவர்கள் விரும்பியபடி எல்லாம் செயல்பட அவர்களுக்கு உரிமை கொடுக்கவில்லை. சில வரம்புகளுக்குள்ளேயே செயல்படலாம்.

அதிகாரம் குவியக் குவிய, கட்டுப்பாடும் அதிகமாக வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை, கோடை விடுமுறையின்போது மட்டுமே, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையோ, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களையோ, ஊர் விட்டு ஊர் மாற்றலாம்.

அப்படிச் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு. விதி உண்டு. எந்த எந்தத் தொடக்கப்பள்ளி ஆசிரியரை எந்த ஊரிலிருந்து எந்த வாருக்குமாற்ற உத்தேசம் என்று பட்டியல் போட்டு முன்னதாகவே மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்புதல் கடமை. மாற்றத்திற்குரிய காரணத்தையும் பட்டியலில் காட்டவேண்டும்.

அலுவலர், உரிய ஆய்வாளர்களைக் கலந்து ஒரு நிலை ாடுக்கவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு நாளில், ஆய்வாளர்கள் உடனிருக்க, மாவட்டக்குழுத் தலைவரும் கல்வி அலுவலரும் கூடிப்பேசி எவர் ாவாை மாற்றலாம்; எவர் எவரை மாற்றக் கூடாதென்று முடிவு செய்வார்கள்.

அடுத்த பொது மாறுதலுக்கு முன்பு எவ்வூரிலாவது ஏதாவது _ர்ெபாராத நெருக்கடி ஏற்பட்டு, அதனால் ஒர் ஆசிரியரை அங்கிருந்து மாற்ற நேரிட்டால் என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/141&oldid=623034" இலிருந்து மீள்விக்கப்பட்டது