பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 127

அவர் சேலத்திற்கு வரும்போது, நான் வெளியூர்ப் பயனத்தில் இருப்பேன்.

நான் சேலத்தில் தங்கும் நாள்களில், அவர் எங்காவது தொலைவில் இருப்பார்.

எனவே, நான் பெரிதும் விழைந்தும் நாச்சியப்பரைக் காணாமலே இரண்டு திங்கள்போல் ஓடிவிட்டன.

அது பெருந்தீமையாக உருவாகும் வேளை தற்செயலாக ாங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

18. தீமை விலகியது

நல்லவர் சின்னய்யா பிள்ளை

நான் சேலத்தில் பணி புரிந்தபோது, திரு. டி. சின்னய்யா பிள்ளை ாம்.ஏ., பி.எல். என்ற புகழ்பெற்ற வழக்குரைஞர் அங்கு இருந்தார்.

அவர் என்னுடைய கல்லூரிக் காலந்தொட்டு நண்பரான திரு. டி.டி. _அப்யாசாமிக்குச் சகலர்.

என் மனைவியும் நானும் அவரோடும் அவர் குடும்பத்தோடும் நட்புக் கொண்டோம். அது, பண்பாடுடையார் நட்பாக வளர்ந்தது; பயன் பட்டது.

திரு. சின்னய்யா பிள்ளையின் வீட்டில் ஒரு நன்மை விழா, அதற்கு நாறும் என் மனைவியும் அழைக்கப்பட்டிருந்தோம்.

சடங்கு நடந்ததும் பத்து மணிக்குள் பகல் விருந்து அளித்தார்கள்.

நான் முதல் பந்தியில் உணவு அருந்திவிட்டு, அலுவலகத்திற்குக் காலத்தில் சென்றுவிட்டேன்.

நச்சு விதை

சில மணித் துளிகளுக்குப் பிறகு, அவ்விருந்திற்கு திரு. கே. ஏ.

நாச்சியப்ப கவுண்டர் வந்தார்.

அவரும் வேறு சில நண்பர்களும் திரு. சின்னய்யாவுடன்

_ரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் பற்றிப் பேச்சு

பlததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/143&oldid=623036" இலிருந்து மீள்விக்கப்பட்டது