பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நினைவு அலைகள்

‘நாம், பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்று ஏதேதோ செய்து உயர்த்தப் பார்க்கிறோம். ஆனால், நம்மவர்களோ, தான் என்று முனைப்பாகவே இருக்கிறார்கள்; மற்றவர்களை மதிப்பதாகக் கானோம்.

‘ஒன்று பாருங்கள் நம் மாவட்டத்திற்குப் புதிதாக ஒருவர், கல்வி அலுவலராக வந்திருக்கிறாராம். அப் பதவிக்கு நேரடியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவராம்; வந்து இரண்டு மாதங்கள் - அறுபது நாள்கள் ஆகப்போகின்றன.

‘இதுவரையில் மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவரை மதித்து. அவரை வந்து பார்க்கவில்லை.

‘பெரியவர்கள் பாடுபட வேண்டியது. இளைஞர்கள், பலனைப்

பெற்றுக் கொண்டு, மற்றவர்களை மதிக்காமல் போக வேண்டியது

‘அவர்களாக இருந்தால், அப்படி நடப்பார்களா?’ இப்படி ஒருவ என்பேரில் புகார் கூறினார்.

திரு. நாச்சியப்பர் முகம் சிவந்தது. ‘புதிதாக வந்திருப்பவ பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு வேண்டியவராம். அதனால்தான் நம்பை மதிக்க வில்லையோ இப்படி நாச்சியப்பர் கேட்டார்.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னய்யா, வாய் திறக்கவில்லை. ஆனால் விரைந்து செயல்பட்டார்.

அவசர அழைப்பு

என்னை உடனே அழைத்து வரும்படி கட்டளை இட்டுத் காரையும் அனுப்பி வைத்தார்.

அலுவலகத்திலிருந்த என்னைத் தேடிக் கார் வந்தது. ஒட்டுநா வந்தார்.

‘அய்யா, கையோடு அழைத்து வரச் சொன்னார்கள். அய்ந்து நிமிடங்களில் திரும்பிவிடலாம் ‘ என்று ஒட்டுநர் பணிவோ, என்னிடம் சொன்னார்.

திரு. சின்னய்யாவின் பங்களாவிற்குச் சென்றேன். அய்ந்தே மணித்துளிகள் மட்டுமே தேவைப்பட்டது.

திரு. சின்னய்யா என்னை நாச்சியப்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவரோடும் அவரது நண்பர்களோடும் உரையாடினேன். பின்னணி அறியாத நான், இயற்கையாகப் பேசினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/144&oldid=623037" இலிருந்து மீள்விக்கப்பட்டது