பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நினைவு அலைகள்

‘அங்கும் இட நெருக்கடிதான். தலைமை ஆசிரியர் ஒர் ஐயர் இருப்பினும், நகராட்சி உறுப்பினர்கள் நம்மவர்களே என்ற வி.ை வேகமாக வந்தது.

அது எனக்கு வழி காட்டியது.

‘கோகுல நாத் உயர்நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக். விட்டால், நூற்றுக்கணக்கான பார்ப்பனப் பிள்ளைகள் நகராட் ப் பள்ளிக்கு வந்து நிற்பார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி, கல்வித்துறை ஆணையிடலாம்; அப்போது . மாணாக்கர் வெகுவாகப் பாதிக்கப்படலாம் அல்லவா?

‘இருக்கிற பள்ளிக்கு இடையூறு செய்துகொண்டு, காலங் கடந்த வேண்டாம். அதற்குப் பதில், நான் இருக்கும்போதே, நகராட்சியின் சார்பிலோ, வேறு அமைப்புகளின் சார்பிலோ, சேலத்தில் இரண்ப மூன்று உயர்நிலைப் பள்ளிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வாங். கொள்ளுங்கள். =

‘அப்படிச் செய்துவிட்டால், சில ஆண்டுகளுக்காவது, பள்ளிகளின்

இடப் பஞ்சம் ஏற்படாது; நம் பிள்ளைகள் அனைவருக்கும் இ கிடைத்துவிடும்’ என்று வழி சொன்னேன்.

தீமை செய்ய அஞ்சினேன்

அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘என்ன? நாங்களெல்லாரும் துணை நிற்கிறபோதே, இப்படி அ. . கிறீர்களே!துணிந்து அடிக்கவேண்டியதுதானே என்று குறைபட்டார்கள்

தீயது செய்ய, இருப்பதைக் கெடுக்க அன்றும் அஞ்சினேன். பின்னரும் அஞ்சினேன்; இன்றும் அஞ்சுகிறேன். அதனால், என்னை பிள்ளைப் பூச்சியாகக் கருதுவோர் கருதட்டுமே!

சேலம் அன்பர்கள், மனக் குறையோடு சென்றார்கள்; 1. பேர்களிடம் நடந்ததைச் சொல்லிப் பொருமினார்கள்.

சூளுரை

சில நாள்கள் சென்றன; சென்னையில் இருந்து நீதிக்கட்சியை

சேர்ந்த பிரமுகர் சேலத்திற்கு வந்தாராம்.

சேலத்தில் நடக்கவிருந்த நீதிக்கட்சி மாநாடு பற்றி உள்ளும்

பெரியவர்களோடு கலந்து பேசிவிட்டு, அன்றே சென்னைக்கு,

திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/148&oldid=623041" இலிருந்து மீள்விக்கப்பட்டது