பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி| து சுந்தரவடிவேலு 133

அவரை வழியனுப்ப, சேலம் சந்திப்பிற்குச் சென்றவர்களில், கோகுல நாத் உயர்நிலைப் பள்ளி பற்றி என்னிடம் பேசிய இருவர் மருந்தார்கள்.

அவர்கள் என்னோடு பேசிய நிகழ்ச்சியைச் சொல்லி, குறைபட்டார்

களாம்.

சென்னையில் இருந்து வந்தவர் வெகுளி; எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசரப் போக்கினர்.

என் மேல் அவர்கள் சொல்லிய புகாரைக் கேட்டுவிட்டு'சென்னைக்குத் திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குநர், திரு. மெவால் ஸ்டேதமிடம் இதைச் சொல்லுகிறேன். ந்ெ.து. சு. க்கு ‘பிய பேசன் முடியவில்லை. அதை முறித்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட ஏற்பாடு செய்து விடுகிறேன்’ என்று அந்தப் பிரமுகர் அவர்களிடம் உறுமினாராம்.

நீதிக் கட்சியின் ஊதுகுழல்களில் ஒன்றாகிய அவர், என்னிடம் பபசாமலே என்னைத் தொலைத்துக்கட்ட வாக்குக் கொடுத்து விட்டார். இதுதான் தமிழரின் தனித்தன்மை; அன்றைக்கு இருந்ததை விட மன்று வளர்ந்துள்ள பொல்லாத நோய்.

அப்படி அவர் வாக்குறுதி கொடுத்தபோது, சேலம் - சூரமங்கலம் _ாக்டர் நமச்சிவாயம் என்னும் நல்லவர் தற்செயலாக அங்கு இருந்தார். அவர் எனது நண்பர். எனவே, பதை பதைத்தார்; அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் காத்திருந்தார்.

அடுத்த நாள் காலை, நமச்சிவாயம் என்னைத் தேடி வந்தார். தயங்கித் தயங்கி முன்னால் இரவு, சேலம் இருப்புப்பாதை சந்திப்பில் நடந்ததைச் சொன்னார். புகார் செய்தவர்கள் பெயர்களைக் கூறினார். குளுரைத்த பெரியவர் பெயரைச் சொன்னார். சொல்லி விட்டு,

‘அவர் ஒரு உளறுவாய், வெகுளி! பின் விளைவுகளைப் பற்றிச் திக்காமல் இயக்குநரிடம் விரைந்து புகார் செய்துவிட்டால் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேரிடக்கூடுமே என்று அஞ்சுகிறேன்.

‘உடனே பெரியாருக்கோ, அண்ணன் குருசாமிக்கோ தகவல் கொடுத்து, தடுப்பு முயற்சியை மேற்கொள்ளச் செய்யுங்கள்’ என்று நமச் சிவாயம் கூறியபோது, அவர் உணர்ச்சி வசப்பட்டார். அவர் கண்களில் நீர் தளும்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/149&oldid=623042" இலிருந்து மீள்விக்கப்பட்டது