பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நினைவு அலைகள்

‘நன்றிங்க இதைப்பற்றிக் கவலைப்படாதீங்க! யோசித்து முடி , செய்கிறேன்’ என்று ஆறுதல் கூறி நமச்சிவாயத்தை அனுப்பி வைத்தேன்.

நமச்சிவாயம் குறிப்பிட்டவர்கள், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் அரும்பாடு பட்டவர்களே! அந்த இயக்கத்தில் முன்னணியில் இருந்தவர்களே!

விளையாட்டுப் பிள்ளைகளைப் போன்று, அடிக்கடி, தாங்கள் கட்டிய வீடுகளை ஆத்திரத்தில் அழித்துவிட்டுக் கைகளைப் பிசைந்து கொண்டு இருப்பார்கள்.

இப்படியும் சில தியாகிகள்

நான் அது பற்றிக் கவலைப்படவில்லை. பெரியாருக்கோ குருசாமியாருக்கோ நான் எதுவும் எழுதவில்லை.

19. மாணவரின் மாண்பு

கல்வியில் கடைசி மாவட்டம்

அன்றைய சேலம் மாவட்டம், பரப்பில் மிகப் பெரியது. இன்று தருமபுரி மாவட்டமாக இருக்கும் பகுதியும் சேலத்தைச் சேர்ந்திருந்தது

இன்று இரு மாவட்டங்களிலுமாக இருநூற்று அய்ம்பது உயர்நிலைப் பள்ளிகள் போல் உள்ளன.

அன்று அவ்வளவு பெரிய மாவட்டத்தில் பன்னிரண்டு உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன.

தொடக்கப் பள்ளிகள்கூட இல்லாத ஊர்கள் பலநூறு ஆகும். எழுத்தறிவில் சென்னை மாகாணத்தில் கடைசி இடத்திலிருந்த பெருமை சேலம் மாவட்டத்திற்கு உரியது.

அப்படிப்பட்ட மிகப் பின் தங்கிய மாவட்டத்தின் கல்விப் பொறுப்பு என் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

எனக்கு அது ஒர் அறைகூவலாகத் தோன்றிற்று. அந்த அறை கூவலைச் சமாளிக்கும் வாய்ப்புகள் எனக்குத் தாராளமாக , தடையின்றிக் கிடைத்தன.

அப்போதையை உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பெரும்பாலோர் ஜாம்பவான்கள்; பொறுப்பு உணர்ச்சி இல்லாதவா என்று எவரையும் சுட்டிக் காட்ட முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/150&oldid=623044" இலிருந்து மீள்விக்கப்பட்டது