பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து-சுந்தரவடிவேலு 135

ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்? பெரும்பாலும் நல்லுணர்ச்சிப் பிழம்புகள்; தாய்நாட்டுப் பற்றால் தப்பட்டவர்கள் சிலர்; சமுதாயத்தைத்துக்கி நிறுத்தத் துடித்தவர்கள் பலர் வேலை தெரியாதவர் என்று பிறர் குற்றங்காணக்கூடாது என்ற குறிக்கோளோடு செயல்பட்டோர் பலர் ஆவார். o

வேதநாயகம், இலட்சுமண செட்டியார், பி.ஆர். சுப்ரமணிய பிள்ளை, ஈ. சண்முகம் பிள்ளை, கிருஷ்ணசாஸ்திரி, சாமிதாஸ், நாராயணசாமி அய்யர், சேஷகிரி ராவ் என்ற தலைமை ஆசிரியர் பெயர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் பரிவினைப் பொங்க வைக்கும்.

மாந்தர் தேட வேண்டியவற்றுள் பணத்திலும் உயர்ந்தவை பல என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

‘மகான்கள் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் எவரையும் கண்டு வெட்கப்படுவதற்கு இல்லாத வாழ்க்கை வாழ முயன்றார்கள். அதில் அவர்கள் பெரிதும் வெற்றி பெற்றார்கள்.

இவர்களுக்கு நான் புதியவன். எனினும், எவரும் என்னிடம் ஒத்துழையாமை வழியைக் காட்ட வில்லை. நானும் எவரையும் கடிந்து கொள்ள நேரவில்லை.

ஆசிரிய சமுதாயத்தின் ஒத்துழைப்புக் கிடைத்தது போன்றே, பொது மக்கள், அவர்களுடைய பல கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் எனக்குத் தாராளமாகக் கிடைத்தது.

முதல் பேச்சு

நான் முதன் முதலாகப் பார்வையிட்ட உயர்நிலைப் பள்ளி நாமக்கல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியாகும்.

அன்று நாமக்கல் வடக்கு உயர்நிலைப் பள்ளி கிடையாது. போர் ஆதரவு உரை ஆற்றுவதற்காகத் திடீரென அப் பள்ளிக்குச் சென்றேன்.

அந்தக் காலத்து நெடுஞ்சாலைகள் இன்றைக்கு இருப்பது போன்று, அவ்வளவு நல்ல நிலையில் இல்லை.

குழிகள் நிறைந்திருக்கும்; சேலத்தில் இருந்து நாமக்கல் போய்ச் சேருவதற்குள் முதுகு வலி எடுத்துவிடும்.

அந்தக் காலத்தில் பொதுத்துறைப் பேருந்துகள் இல்லை. எல்லாத் தடங்களிலும் தனியார் பேருந்துகளே ஒடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/151&oldid=623045" இலிருந்து மீள்விக்கப்பட்டது