பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நினைவு அலைகள்

ஆங்கிலேயர் ஆண்டபோது, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குக் கூடப் பெரும் மதிப்பு இருந்தது.

சேலம் மாவட்ட மக்கள் கல்வியை நாடா விட்டாலும் கல்வியை மதித்தார்கள்; கல்வியாளர்களை மதித்தார்கள்.

எனவே, முன்கூட்டியே சொல்லி அனுப்பிவிட்டால் கல்வி அலுவலருக்கும் பேருந்துகளில் முன் வரிசையில் இடம் ஒதுக் . வைப் பார்கள்.

அன்று ஏறு என உலவிய மாவட்டக் கல்வி அலுவலர்களை பிற்காலத்தவர்கள் சுண்டெலிகளாக்கி விட்டார்களே என்று எண்ணிக் கண்ணிர் வடிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

நாமக்கல் போய்ச் சேர்ந்ததும் பயணிகள் மாளிகைக்குச் சென்றேன் பெட்டி பேழைகளையும் கடைநிலை ஊழியரையும் அங்கே விட்டு விட்டு, அருகில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்குத் தனியாகவே நடந்து சென்றேன்.

அப்போது முற்பகல் பள்ளியின் துழைவாயிலில், இரண்டொருவர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து,

‘தலைமை ஆசிரியர் அறை எங்கே, தம்பி, ‘ என்று கேட்டேன். நின்று கொண்டிருந்த இருவரும் என்னைவிட ஒரு சாண் உயரமாக, கம்பீரமாக இருந்தார்கள்.

அவர்களைத் தம்பி என்று அழைத்ததை அவர்கள் விரும்பவில்லை போலும்.

நான் அலுவலக உடையில் இல்லை; வேட்டி, சிப்பா அணிந்து கொண்டிருந்தேன். அதோடு, அந்த முப்பத்து இரண்டாம் வயதிலும் குழந்தை முகம் கொண்டவனாக இருந்தேன்.

ஒன்பது ஆண்டுகால அரசு ஊழியத்தால், அதன் உயிரான தொல்லை களால், தார்குச்சுகளால் முகத்தில் கோடுகள் தோன்றாமல் இருந்தது வியப்பே !

என்னை எவனோ ஒர் இளைஞன் என்று எண்ணிய இருவரும் மிக அலட்சியத்தோடு, மையக் கட்டடத்தைச் சுட்டிக்காட்டி ‘அதற்குள் சென்று பாருங்கள்’ என்றார்கள்.

நான் எரிச்சல் கொள்ளவில்லை. காட்டிய இடத்திற்குச் சென்றேன்

தலைமை ஆசிரியர் அறை கண்ணில் பட்டது. கதவை மெதுவாக, தட்டி விட்டு உள்ளே நுழைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/152&oldid=623046" இலிருந்து மீள்விக்கப்பட்டது