பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 139

‘பதுக்கினால், துன்பப்படப் போகிறவர் எவர்? நம் பங்காளிகள்; நம் தாயாதிகள்; நம் நண்பர்கள்; நமக்காக உழைப்போர் ஆகிய நம்மவர்களே.

‘'வேண்டியவர்கள் எல்லாரும் நசித்துப் போய்விட்டால் நாம் யாரோடு வாழப் போகிறோம் அயலார்களை அழைத்து வந்து குடியேற்றப் போகிறோமா? ‘வாழில் முப்பது கோடியும் வாழ்வோம்'’, என்று பாரதி கட்டளையிட்டார். அதை மீறக்கூடாது.

‘வதந்திகளைப் பரப்பாதீர். உச்சி மீது வானிடிந்து வீழ்வதே ஆனாலும் முன் கூட்டி, கிலி பிடித்து நடுங்குவதால் அதைத் தடுத்துவிட முடியுமா?

‘முடியாது.

‘ஆகவே, வருவது வரட்டும்; அப்போது சமாளிப்போம் என்ற அச்சமற்ற உறுதியோடு, உங்கள் பணியில் கருத்தாயிருங்கள்’ இந்தப் பாணியில் உரை ஆற்றினேன். என்னுடைய உரை ஒரு மணிக்கு மேல் |lண்டுவிட்டது.

தலைமை ஆசிரியர் பொருத்தமான முடிவுரை கூறி முடித்தார்.

l  

நன்றி கூறுபவர் பெயரைச் சொல்லும் வேளை, அவையிலிருந்த ஒருவர், தலைமை ஆசிரியரிடம் விரைந்து வந்தார்.

ஒரு மணித்துளி தாம் பேச விரும்வுதாகப் பணிவுடன் கூறினார். தலைமை ஆசிரியர் தயங்கினார். நான் குறுக்கிட்டேன். ‘பேசவிடுங்கள்; மூன்று மணித்துளிகளில் முடித்துவிடு தம்பி!’ என்றேன்.

இளைஞர் பேசினார்; அவர் அப் பள்ளி மாணவர். அவர் எவர் பேச்சையும் ஒட்டியோ, வெட்டியோ பேசவில்லை.

முற்பகல் என்னைப் பொருட்படுத்தாமல் பதில் கூறிய சிறிய நிகழ்ச்சியைப் பணிவுடன் வெளிப்படுத்தினார்.

‘பக்கத்துப் பள்ளிக்கூட மாணவர் என்று எண்ணி, அப்படிப் பதில் கூறியதற்காக வெட்கப்படுகிறேன். இவ்வளவு பெரிய முற்போக்குச் | lதனையாளர் என்னை மன்னித்து விடும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்’ என்று சுருக்கமாகவே முடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/155&oldid=623049" இலிருந்து மீள்விக்கப்பட்டது