பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னிலும் கற்றவர், என்னிலும் வல்லவர், என்னிலும் பொறுமையாளர், அமைதியாளர், பண்பாளர், என்னிலும் சிறந்தவர்; குன்றின் மேல் விளக்காதற்கு முந்தாதவர், வீட்டு விளக்காக விளங்கியதில் மகிழ்ச்சி கொண்டவர்.

அவரே, காந்தம்மா சாந்தமே உருவான காந்தம்மா என் மனைவி காந்தம்மா; என் வாழ்க்கைத் துணைவி, காந்தம்மா; என் மெய்க்காப்பாளர் காந்தம்மா என் கொள்கைக் காப்பாளர் காந்தம்மா, இதுவும் அதுவும் எதுவும் கேட்டு நச்சரிக்காதவர் காந்தம்மா.

பல்கலைக் கழகப் பட்டங்கள் மூன்றினைப் பெற்றவர் காந்தம்மா ஆறு ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக விளங்கியவர் காந்தம்மா சென்னை மாகாண சாரணிய இயக்கத் தலைமையக ஆணையராகத் தொண்டாற்றியவர், காந்தம்மா! பாமரர்களையும் மதித்தவர் காந்தம்மா! யான், எனது என்னும் செருக்கற்றவர் காந்தம்மா அவாவின்மைக்கு அடக்கமான எடுத்துக்காட்டு என் காந்தம்மா!

பகைமை பாராட்டாத காந்தம்மா வெறுப்பை வளர்க்காத காந்தம்மா இன்னா செய்தார்க்கும் இனியவே செய்த காந்தம்மா!

நாற்பத்து நான்கு ஆண்டுகள், எனக்காகவே வாழ்ந்து வந்த காந்தம்மா!

22 1184 அன்று இயற்கை எய்திய என் காந்தம்மாவுக்கு இந்நூலை வவிய காணிக்கையாக்குகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/16&oldid=623054" இலிருந்து மீள்விக்கப்பட்டது