பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நினைவு அலை

‘பிரபேசனை நீடிக்கவும் என்று, மண்டல ஆய்வாளர், திரு.வி. ஆப் அரங்கநாதன் இயக்குநருக்குப் பரிந்துரைத்தார். அது பலித்தது.

மீண்டும், உரிய காலத்தில், பேச்சுத் தேர்வுக்குச் சென்றேன். அதே கோவையில் நடந்தது. முதன் முறையும் சரி, இரண்டாம் முறையும் சபி. திரு.வி.ஆர். அரங்கநாத முதலியார் அவர்களின் பங்களாவில்தான் தங்கினேன்.

அவரே அங்குத் தங்க அழைத்தார்; அவர் விருந்தோம்பலின் சிறந்தவர்.

தேர்வுக்குப் புறப்படும்போது, ‘தெம்பாகப் போங்கள்; சென்ற முறை ஏதோ சூது நடந்திருக்கிறது’ என்று ஊக்கப்படுத்தியும் அனுப்பினார்.

டி. எம். நாராயணசாமிப் பிள்ளை

இம் முறை, பழைய இராமசாமி நாயுடு இருந்தார். அவர் தெலுங்க, மொழிப் புலமைக்காக அழைக்கப்பட்டவர். தேர்வுக் குழுவின் சார்பின் திரு. அனந்தாச்சாரியார் வரவில்லை. அவருக்குப் பதில் திரு. டி.எம். நாராயணசாமி பிள்ளை வந்து இருந்தார்.

என்னைப் பேட்டிக்கு அழைத்தார்கள் உட்காரச் சொன்னார்கள். அப்படி அமர்ந்ததும் திரு. பிள்ளை விடுவிடு என்று தாக்கினார்.

‘செய்ய வேண்டியதை அவ்வப்போது செய்வதில்லை. க ை நேரம் வரை தள்ளிப் போடுவது; அந்தக் கோளாறு, உம் ‘பிரபேசன் நீடிப்பிற்கு ஆளாக்கி விட்டது. இம் முறை தேர்வில் தவறினால் வேலை போய் விடும்.

‘என்ன அலுவலர் அய்யா நீர்? விழிப்பாக, சொந்த விவகாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டாமா? என்ற பொரிந்து கொட்டினார்.

‘'நான் முதல் தலைமுறை அரசு அலுவலன்; எனவே, பிழைப்பிற்கு முன்னுரிமை கொடுக்காமல், பணிக்கு முன்னுரிமை கொடுத்து ஏமாறிவிட்டேன், அய்யா’ என்று அடக்கத்தோடு பதில் அளித்தேன் அப்புறம் ?

திரு. இராமசாமி நாயுடு பேச்சுத் தேர்வு நடத்தினார். விரிவாகவே நடத்தினார். பிறகு வெளியே வந்தேன்,

சில நாள்களுக்குப் பிறகு முடிவு வெளியிட்டபோது, நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/160&oldid=623055" இலிருந்து மீள்விக்கப்பட்டது