பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நினைவு அலைகள்

‘எல்லாவற்றையும் ஊரார் கொடுத்துவிட்டால், அப்புறம் அாக எதற்கு?’ என்று வைதீக சிந்தனையாளர்கள் பலர் முணுமுணுத்தார்கள்

அவர்களே உலகம் அல்ல. பல ஊர்களில் மக்கள் அவ் வழியை அப்படியே ஏற்றுப் பின்பற்றினார்கள்.

விளைவு?

1945 ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில், புதிதாக அய்ந்து உயர்நிலைப் பள்ளிகளைத் தொடங்க, இயக்குநரிடம் இருந்து ஆணை பெற முடிந்தது.

படத்திறப்பு

அவற்றில் ஒரு உயர்நிலைப் பள்ளி அரூர் என்ற பின்தங்கிய பெரிய சிற்றுாரில் தொடங்கப்பட்டது.

அந்தத் தொகுதியின் மாவட்டக் குழு உறுப்பினர் யார்? சென்னி செட்டியார் என்ற நீதிக்கட்சிக்காரர். திரு. நாச்சியப்பர் கட்சிக் கண்ணோட்டத்தைப் புகுத்தாமல், நிர்வாகம் நடத்தியதால், அரூருக்கும் உயர்நிலைப் பள்ளி கிடைத்தது

அரூர் உயர்நிலைப் பள்ளியின் தொடக்கவிழா வெகு சிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

அவ் விழாவிற்கு டாக்டர் சுப்பராயன் தலைமை ஏற்றார் பலர் உரையாற்றினர். --

மாவட்டக் குழு தலைவர் திரு. நாச்சியப்பர் திருவுருவப் படமும் அவ்விழாவில் திறந்து வைக்கப்பட்டது.

அந்தப்படத்தைத் திறந்து வைக்கும் பெருமை எவருக்கு, அளிக்கப்பட்டது?

மாவட்டக் கல்வி அலுவலனாகிய எனக்கு அளிக்கப்பட்டது. அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

விழாவின்போதே, அதற்கு வேண்டிய விளக்கமும் கிடைத்தது. அரூர் விழாவில்தான் முதன்முதல் டாக்டர் சுப்பராயனைக் கண்டேன்.

அவர் பந்தலுக்குள் வந்து அமர்ந்ததும் திரு நாச்சியப்பர் என்வை அவருக்கு அறிமுகப்படுத்தினார்; அவர் என்னோடு கை குலுக்கிவிட்டு

‘நாச்சியப்பருக்கு வேண்டியவராக இருப்பது மிகக் கடினம். அதுவும் அலுவலர்களை மிகத் துல்லியமாக எடை போட்டு ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/162&oldid=623057" இலிருந்து மீள்விக்கப்பட்டது