பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நினைவு அ கா II

அப்படிச் செய்வதற்கு முன்பு, மாவட்டஆட்சிக் குழுத் தலைவரி 1 இருந்து உரியவர்களின் பணி பற்றிய தகவல்களையும் இரகசிய குறிப்புகளையும் பெற்று மதிப்பிட வேண்டும்.

அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், பட்டியலில் சேர்த்து மண்டலப் பள்ளி ஆய்வாளருக்கு அனுப்பவேண்டும்; மண் . ஆய்வாளர் அதை ஏற்கலாம்; ஏற்காமலும் மாற்றலாம்.

அவர் முடிவுப் படி, அப்பட்டியல் வரிசைப்படி, தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அந்தப் பட்டியல் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இரு முறை, நான் ஆயத்தம் செய்து ஒப்புதலுக்கு அனுப்பிய பட்டியல்கள் பற்றி நகராட்சித் தலைவரோ, மாவட்ட ஆ. . . குழுத்தலைவரோ, மண்டல ஆய்வாளரோ என் கருத்துக்கு முரவை கருத்து கொண்டது இல்லை.

அதோடு, அத்தனை பேர்களுமே நல்லபடி பணியாற்றி, தங்களுக்கும், தங்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நற்பெயர் தேடி , தந்தார்கள்.

மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாணிக்கம் பிள்பை மாவட்ட ஆட்சி உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் . முத்துசாமி, அரங்கசாமி, சண்முகம், கிருஷ்ணபண்டாரம் போன்ற பலருமே, தாக்குப் பிடித்து, ஒழுங்கை, கட்டுப்பாட்டைக் காப்பது. வெற்றி பெற்றார்கள்.

கிருஷ்ண பண்டாரம்

திரு. கிருஷ்ண பண்டராம் ஆதி திராவிடர் பட்டம் பெற்றது. நாட்டுப்பற்று பற்றி அரசு ஊழியத்திற்குப் போக மறுத்துவிட்டார்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து, சில ஆண்டுகள் ஆக்கப்பணி புரிந்து வந்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சிக் குழுவின்கீழ் கல்விப் பணியாற்ற விரும்பினார்.

அப்போது பட்டதாரி ஆசிரியர் வேலை காலி இல்லை. இடைநிலை ஆசிரியராகத்தான் சேர்ந்தார்.

மனக்குறை யின்றி, சூதுவாது இன்றி ஆர்வத்தோடு பணி புilது வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/164&oldid=623059" இலிருந்து மீள்விக்கப்பட்டது