பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நினைவு அலைகள்

‘தருமபுரி உயர்நிலைப் பள்ளிக்குப் பெரியார் அழைக்கப்பட்டார். அவரும் பள்ளிக்கு வந்து பேசினார்.

‘மாணவ மன்றக் கூட்டங்களுக்கு அழைப்பதைப் பற்றி நான் தலையிடுவது இல்லை. பெரியார், என்ன பேசுவாரோ, என்ன சலசலப்பு ஏற்படுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

‘கூட்டம் நடந்த பிறகு, தலைமை ஆசிரியர் நாராயணசாமி அய்யர் வந்து என்னைக் கண்டார். கூட்டத்தின் முழு விவரத்தையும் கூறினார்.

‘பெரியார் பேச்சு முழுவதும் கல்வியின்பால் அக்கறை கொள்ளுதல், பள்ளிக்கூடக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடத்தல், ஒழுங்கும் ஒழுக்கமும் கற்றுக் கொள்ளல், ஊர் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு படிப்பைப் பாழாக்காது இருத்தல் ஆகியவை பற்றியேதானாம்.

‘பார்ப்பன வெறுப்போ, சமய நிந்தனையோ, அரசியல் கண்டனமோ இல்லையாம். இன்னும் சில வாரங்களுக்காவது மாணவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதாய் இருக்கு மென்று, நாராயணசாமி அய்யர் பூரிப்போடு கூறினார்’ என்று நாச்சியப்பர் கூறினார்.

அதுவே, பெரியாரின் தனித்தன்மை என்பதை உணர்ந்திருந்த எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

சேலத்தில் இருக்கையில் என் மனைவி காந்தம்மா கருவுற்றார். மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் அனுமந்த ராவ் அவ்வப்போது, மருத்துவ சோதனை செய்து வந்தார்; நிலைமை நிறைவாகவே இருந்தது.

உரிய காலத்தில், காந்தம்மாவைச் சென்னைக்கு - அவருடைய தாய் வீட்டிற்கு-அனுப்பி வைத்தேன்.

சென்னை எழும்பூர் பிள்ளைப்பேறு மருத்துவமனைக்குச் சென்று, டாக்டர் இலட்சுமண சுவாமி முதலியாரிடம் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

அவரும், குத்துளசி குருசாமிக்காக, தனிப்பட்ட கவனத் தோடு மருத்துவம் பார்த்து வந்தார்.

ஒரு வாரத்தைக் குறிப்பிட்டு, அவ்வாரத்தில் குழந்தை இயல்பாகப் பிறந்து விடுமென்று, முதலியார் கூறினார்.

அந்த வாரத்தில் நான் சென்னையில் இருக்க விரும்பினேன் விடுப்புக்கு எழுதினேன்; மண்டல ஆய்வாளர் விடுப்பைக் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/168&oldid=623063" இலிருந்து மீள்விக்கப்பட்டது