பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நினைவு அலைகள்

ஒவ்வோர் ஆண்டும் இரு ஆதி திராவிடர்கள் மனு போட்டிருந் தார்கள். உரிய காலத்தில் போட்டிருந்தார்கள்.

நான்கிற்கு இரண்டு மனுக்கள்ே வந்தும் பொருளில்லாத நொண்டிச் சாக்கைச் சொல்லி, அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

எனவே, உரியவர்கள்பேட்டிக்கு அழைக்கப்படவில்லை.

இழப்பை ஈடு செய்தேன்

ஆதி திராவிடர் இடங்கள் சாதி இந்துக்களுக்குக் கிடைத்தன. அந்த ஆக்கிரமிப்பைச் சரி செய்ய விரும்பினேன். -

“எட்டாவது தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடப் பையன்கள் இருந்தால், ஆசிரியப் பயிற்சிக்கு உரிய காலத்தில் மனுப்போடத் துண்டுங்கள்’ என்று சில உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சொல்லி வைத்தேன்.

பலன் இருந்தது. அதற்கான காலத்தில் பதினான்கு மனுக்கள் வந்தன.

அத்தனை பேர்களையும் தேர்ந்தேடுத்தேன். அனைவரும் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

சேர்க்கையெல்லாம் முடிந்த பிறகு மேட்டுருக்குப் போக நேர்ந்தது.

சமத்துவவாதி வெட்கட்ராமய்யா

பயிற்சிப் பள்ளியின் தலைமை யாசிரியர் என்னைக் கண்டார்.

என்னுடன் உரை ஆற்றிக்கொண்டு இருந்தார்.

அவர் சமத்துவவாதி. தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரைப்போல்

பூனுலைக் கழற்றிவிட்டவர். எனவே,

‘இவ்வாண்டு சேர்ந்தவர்கள் திறன் எப்படி இருக்கிறது? என்று நான் அவரைக் கேட்டேன்.

‘எல்லோருமே அக்கறையாகப் படிக்கிறார்கள்; ஒழுங்காகவும் கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ளுகிறார்கள்.

‘ஆனால், இது சிறிய ஊராயிற்றே! சாதிக் கண்ணோட்டம் சற்று அதிகமாக உள்ளது. உங்க கல்வி அதிகாரி, பயிற்சிப் பள்ளிக்கூடத்தை ஆதிதிராவிடப் பள்ளிக்கூடமாக ஆக்கிவிட்டாரே “ என்று சொல்லு கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/172&oldid=623068" இலிருந்து மீள்விக்கப்பட்டது