பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 GO நினைவு அலைகள்

கல்வி நிலைய நிகழ்ச்சிகளில் அந்தப் பெரியவரோடு கலந்து கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றேன்.

தமிழ்க் கடலாக விளங்கிய, பழுத்த பழமாகிய அவர், என்னை ஒட்டிப்பேசிப் பாராட்டியது எனக்கு ஆர்வமூட்டியது.

வெட்டிப் பேசுவதிலும் கிண்டல் செய்வதிலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதிலும் அதிக நாட்டம் செலுத்தும் இக் காலப் பேச்சாளர்கள் வரதநஞ்சையா போன்றவர்களின் பேச்சுகளைக் கேட்க முடியாதே!

இராமசாமி கவுண்டரின் பாராட்டு

சேலம் கல்லூரி முதல்வர் திரு அ. இராமசாமி கவுண்டரும் நல்ல நாவன்மை படைத்தவர்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டார் பிணிக்கும் வகையி. பேசியவர்.

அவரோடு பல நிகழச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன். உள்ளத்தின் உண்மையொளி ஒன்றை மட்டும் முதலாகக் கொண்க உரையாற்றிய இளம் பேச்சாளனாகிய என்னை அவர் பலமுறை ஊக்கியுள்ளார்.

அவரது கல்லூரியிலும் பேச, ஒரிரு முறை அழைத்துப் பெருமை செய்தார்.

கல்லூரி முதல்வர் திரு இராமசாமி கவுண்டர், ஒருமுறை வ மேடைப்பேச்சை எடைபோட்டுக் காட்டினார்.

‘பெரியாரைப் போன்று நீங்களும் உங்கள் பொறுப்பிய கருத்துகளைக் கூறுகிறீர்கள். இவர் இப்படிச் சொன்னார்; அவர் அப்படிச் சொன்னார் என்று சொல்லி மற்றவர்கள் பின்னால் பதுங்கிெ கொள்வதில்லை’ என்று கூறினார்.

பல்லாண்டுகளுக்கு முன்னரே, மேற்கூறியபடி என்னுடைய இயல் மாறிவிட்டது.

பொது மக்களிடம் கல்வியின்பால் நாட்டத்தை வளர்ப்பதற்காக, பல பாரதி பாடல்களையும் சில பாரதிதாசன் பாடல்களையும் கலந்து பேசத்தொடங்கினேன். அப் பழக்கம் பெருகிவிட்டது.

பாரதிதாசனைக் கண்டேன்

நான் சேலம் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தபோது, புரட் . கவிஞர், பொது உடைமை முரசு, சமத்துவத்தாரையாம் - பாரதிதாசனை முதன் முதல் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/176&oldid=623072" இலிருந்து மீள்விக்கப்பட்டது