பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ ' சுந்தரவடிவேலு 16.1

சேலம் பரமத்தி வேலூரில் அவர் உரையைக் கேட்டேன். அன்று கேட்ட கருத்து, இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘சிறுவர்கள் சிலர் காற்றாடிகளைப் பறக்கவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவனுடைய காற்றாடி மிக உயரப் பறந்தது. சிறுவனுக்குக் கொள்ளை இன்பம்.

‘அடுத்த நொடி அவனுடைய காற்றாடி தந்திக் கம்பத்தில் சிக்கியது. சிறுவன் சட்டென்று இழுத்தான்: வால் அறுந்து போய்விட்டது.

‘இமைக்கு முன்பே சிறுவன், அடுத்திருந்த பெருமரத்தின் பின்னே முடினான். நொடியில் கோவணத்தின் ஒரத்தைக் கிழித்து, காற்றாடிக்கு வாலாகக் கட்டினான். காற்றாடியை மீண்டும் பறக்க விட்டான். .

‘இம்முறை அந்தக் காற்றாடி மேலும் உயரப் பறந்தது; துள்ளிக் குறித்தான்; மகிழ்ந்தான் சிறுவன். -

‘அடுத்த வினாடி! அக் காற்றாடியின் வால், கோபுரக் கலசத்தில் சிக்கிக் கொண்டது.

‘இப்படியும் அப்படியும் இழுத்துப் பார்த்தான். வால் அறுபட்டு விட்டது.

‘பொற் கலசத்தில் சுற்றிக்கொண்ட, பழங்கந்தை பட்டொளி விசிற்று. ‘என் வால் எப்படிப் பளபளக்கிறது பார் என்று சிறுவன்துள்ளிக் குதித்தான்.

‘அறிவில் முதிர்ந்த நாம், அச் சிறுவனின் நிலையில் நின்று விடலாமா? புத்தம் புதிய,இயற்கையான ஒளியுடைய இலக்கியங்களை | ருவாக்கவேண்டாமா? “ என்று கணிரென்ற வெண்கலக் குரலில் பாரதிதாசன் பேசக் கேட்டது, இப்போதும் ஒலிக்கிறது.

23. இந்தோ சோவியத் நட்புறவு

கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்

நான், சேலம் மாவட்டக் கல்வி அலுவலனாகப் பணி புரிந்தபோது,

வருடைய நட்பைப் பெற்றேன்.

அவர்களுடைய நட்பு இன்றுவரை நீடிக்கிறது; வாழ்நாள் முழுவதும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

அத்தகைய நண்பர்களில் ஒருவர், திரு. புத்தனேரி சுப்பிரமணியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/177&oldid=623073" இலிருந்து மீள்விக்கப்பட்டது