பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நினைவு அலைகள்

அவர் அப்போது மேட்டுர் அணையில், பொதுப்பணித் துறையியல் எழுத்தராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். சுறுசுறுப்பான இளைளும். தமிழ்ப் பற்று உடைய இளைஞர்.

அவர் கவிஞராக அரும்பிக் கொண்டிருந்த அந் நிலையில் ‘தமிழ்ப் பண்ணை என்ற பெயரில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி தமிழ்ப் பயியை வளர்த்துக் கொண்டிருந்தார்.

தமிழ்ப் பண்ணை பெரும்புலவர் வரதநஞ்சையா பிள்ளைக்குப் பாராட்டு விழா எடுத்துச் சிறப்புச் செய்தது.

அவ் விழாவிற்குத் தலைமை தாங்கும் பேற்றினை எனக்கு, அளித்தார்கள்.

இருமுறை தமிழ்ப் பண்ணை நடத்திய நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டதாக நினைவு.

திரு புத்தனேரி சுப்பிரமணியம், பின்னர், சென்னைக்கு மாறுதலாக வந்தார்; பணியில் உயர்ந்தார்; தமிழ்த் தொண்டில் வளர்ந்தார். பாராட்டுகளைப் பெற்றார். ‘கலைமாமணி'யானார்; பாரதிதா மன் விருது பெற்றார்.

கவித்திறன் பெற்றவர்களில் சிலரே உலகியல் நுட்பம் அறிந்தவர்கள். அச் சிலரில் ஒருவர் புத்தனேரியார்.

வளர்முகத்தில் இருக்கும் என் நண்பர் புத்தனேரி சுப்பிரமணியம் 2-11-82 அன்று மணிவிழா கண்டார்.

என் இசைவை எதிர்பார்த்து, மணிவிழாக் குழுவில் என்னை உறுப்பினர் ஆக்கிக் கொண்டார்.

விழாவில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்குமாறு முன் கூட்டியே எழுதியிருந்தார். இருப்பினும் கலந்துகொள்ள இயலவில்லை.

என் வாழ்க்கை நிலை

என் நிலை பலருக்குத் தெரியாது. நான் பொதுச் சொத்து. நான் உறவினர்களுக்குப் பயன்படும் நிலையில் இருந்து, அறு நேர்ந்தது, நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.

முப்பத்தைந்து ஆண்டு காலம், முகவரி இல்லாத, பரிந்துரை பெற இயலாத, வழிப்போக்கர்களுக்குக் கைகொடுக்க வாய்ப்புகள் பெற்றிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/178&oldid=623074" இலிருந்து மீள்விக்கப்பட்டது