பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நினைவு அலைகள்

ரொமேஷ் சந்திரா என்ற இந்தியர் சென்னைக்கு வந்தார். அண்ணா சாலையில் உள்ள மைய நூலகக் கட்டடத்தில் பொதுக்கூட்டத்தின் உரையாற்றினார்.

அப்போது'திரு நெ. து. சுந்தரவடிவேலு இந்திய சோவியத் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவராக இருப்பதைக் கண்ட வெளிநாடு ஒன்று (பெயமைக் குறிப்பிட்டார்) எரிச்சல் கொண்டு, துணைவேந்தர் நியமனத்தின் திரைமறைவில் இருந்து தலையிட்டு உள்ளது’ என்று அறிவித்தார்.

ஏற்கெனவே, என் காதில் வீழ்ந்த செய்தியை அவர் உறுதிப்படுத் தினார். அவ்வளவுதான்

அந்தப் பதவி இழப்பை நான் தியாகமாகக் கொள்ளவில்லை.

ஏன்?

இந்திய சோவியத் உதவி

இந்திய சோவியத் நட்புறவு என் உயிரினும் இனியது. எதனால், தன்னாட்சி பெற்ற இந்தியா, நான்கு முறை அண்டை நாடுகளில் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது.

புறமுதுகில் குத்திய அந்த நிகழ்ச்சிகளால், இந்தியாவின் ஆட் ) உரிமை பறிபோகாமல், காப்பதற்கு எவருடைய உதவி கைகொடுத்தது? சோவியத் ஒன்றியத்தின் உதவியே.

சட்டப்படி உரிமை பெறுவதற்கு நான்கு திங்கள் முன்பே நட்புக் கரம் நீட்டி, இந்தியாவோடு தூதர் மட்ட உறவுகொண்ட முதல் நாடு சோவியத் நாடு!

உலக அரங்குகளில் வல்லரசுகள் சில, இந்தியாவின்மேல் பழி சுமத்த முயன்ற போதெல்லாம், நம் நாட்டை ஆதரித்து, நமக்குத்துணை நின்றது சோவியத் நாடே. அது மட்டுமா?

சோவியத் மக்கள் எத்தனை பெரும் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைத்துத் தந்திருக்கிறார்கள்!

அந்தப் பேருதவி கிடைக்காதிருந்தால் இன்னும் பலகோடிக்கு இந்தியாகப்பறை ஏந்த நேர்ந்திருக்குமே!

மனிதாபிமானப் பற்றால் உந்தப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நமக்கு உதவியுள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/180&oldid=623076" இலிருந்து மீள்விக்கப்பட்டது