பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 GG நினைவு o லை I

பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நம்மைக் கற்றி வளைத்து மிரட்டிப் பணியவைக்கத் திட்டமிடுகையில், மெய்யாவ நண்பனாகிய சோவியத் நாட்டோடு, நட்பையும் ஒத்துழைப்பையும் வளர்த்துக்கொள்ளல், எவ்வளவு இன்றியமையாதது!

தாய்க்கு மருந்து வாங்கித் தருவதை தியாகம் என்று பெயர் சூட்ப மகனும் ஒரு பிள்ளையா?

இந்திய சோவியத் நட்புறவை வளர்க்கும் ஒவ்வோர் நினைப் || இந்தியத் தாய்க்கு அளிக்கும் குளிகையாகவே நான் கருதுகிறேன்.

அதன் விளைவாக நான் பதவி இழந்திருந்தால், அதைத் தியாகமாக கருதவேண்டாம்; கடமையாகக் கொள்ளுதலே முறையாகும்.

வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி

சுற்றியுள்ளோர் வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தே அ1. மகிழ்ச்சியில் நெடுநாள், தொண்டு வாழ்வு வாழ்ந்த தந்தை பெரியாரைப் போன்றே என்னைச் சுற்றியுள்ளோர் வளர்ந்து, செழித்து, கொடிகட்டிப் பறப்பதைக் கண்டே நான் மகிழ்ச்சி கொள்வதால்தான் இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அப்படியிருக்க, என்னைவிடக் குறைந்த பணிக்காலத் என்னிலும் வளமான வாழ்க்கை நடத்த வாய்ப்புக் கொண்டவர்கள்,

அதை நினைந்து இன்புறுவதை இழந்துவிட்டு, என்னைக் கண்டு அழுக்காறு கொண்டு, ஏதேதோ கற்பவை செய்துகொண்டு, தங்கள் உடல் நலத்தையும் மனநலத்தைய சிதைத்துக் கொள்கிறார்களே என்றுதான் நான் வருந்துகிறேன்.

நான் வருந்துவதால் அவர்கள் திருந்தப் போவதில்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கும் நம்பிக்கை விளைவிக்காக மாற்றத்தை, காந்தியடிகளின் வாழ்க்கை ஏற்படுத்தாத திருத்தத்தை எளியேன் எப்படி ஏற்படுத்த முடியும்?

நண்பர் மா. இராசகோபால்

சேலத்தில் எனக்குக் கிடைத்த மற்றொரு நண்பர் திரு மா.இராசகோபால்.

அவர், அன்று, ஆவணப் பதிவுத் துறையில், சார்புப் பதிவாளாகப் பணி புரிந்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/182&oldid=623078" இலிருந்து மீள்விக்கப்பட்டது