பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ெ து. சுந்தரவடிவேலு 167 |- -

அவருக்கு அன்றே திராவிட இயக்கத்தவர்களில் சிலரோடு நெருங்கிய தொடர்பு உண்டு; அவர் மேடைப் பேச்சில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார். --

பின்னர், சேலம் மாவட்டப் போர் ஆதரவுச் சொற்பொழிவாளராகப் பணி புரிந்தார்.

அலுவலில் உயர்ந்து, அத் துறையின் தலைமைப் பதிவாளருக்கு உதவியாளரானார். உரிய காலத்தில் ஒய்வு பெற்றார்.

திரு. இராசகோபால், வாழும் கலை அறிந்தவர். அவர் தமது பிள்ளைகள், பெண் ஆகியவர்கள் அனைவரையும் நன்றாகப் படிக்க வைத்து, அவையத்து முந்தியிருக்கச் செய்தவர்.

அவ் வகையில் பிறர்க்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார். திரு. இராசகோபால், முன்னர்க் கூறிய தமிழ்ப் பண்ணையின் சிறப்பு நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு உரை ஆற்றினார். வேறு சில தமிழ் மன்றங்களிலும் நாங்கள் இருவரும் சேர்ந்து பங்கு கொண்டிருக்கிறோம்.

அத்தகைய அன்பர், இப்போது சென்னையில் தங்கியுள்ளார்.

அவ்வப்போது, அவரைக் காணவும் அவரோடு கலந்துரையாடவும் வாய்ப்புகள் கிட்டுகின்றன. இருவரும் முந்தைய நிகழ்ச்சிகளை அசை பொட்டு நிறைவு கொள்கிறோம்.

எத்தனை கோடி ஆற்றல்

மக்கள் வாழ்க்கை புதிர்கள் செறிந்தது; புதையல்கள் கொண்டது. புதிர்கள் அறிவிப்பு இன்றி வந்து நிற்கும்; புதையல்கள்கூடத் தேடாதபோது தட்டுப்படும்.

நான் புதையல் என்று இங்கே குறிப்பிடுவது, பொருட்புதையலை அல்ல. பின் எதை? அறிவுப் புதையலை; தெளிவுப் புதையலையே!

10.19 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இரண்டாவது _wகப்போர் அய்ந்தாண்டுகள் ஆகியும் நிற்கவில்லை.

மேலும் பல்லாண்டுகள் நீடிக்கும்போல் தோன்றியது. அந்த நிலையில், இளைஞர்களிடையே, அப் போரின் தன்மை ப|றிய கருத்துத் தெளிவையும் முதிர்ச்சியையும் வளர்க்க நினைத்தது, _றைய ஆட்சி. அதற்காக வழியொன்றைக் கண்டது.

மூai வார் மாவட்டத்திலும் மாணவர் கருத்தரங்கம் நடத்த

ஆவயிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/183&oldid=623080" இலிருந்து மீள்விக்கப்பட்டது