பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நினைவு அலைகள்

‘கிரிக்கெட் குழுவிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் அளவு திறமை பெற்றார். பலரோடு நட்பாகப் பழகினார்.

வாழ்க்கையில்?

நெடுஞ்சாலைத் தலைமைப் பொறியாளர் நிலைக்கு உயர்ந்தார்.

ஆற்றலிலும் பதவியிலும் உயர்ந்தாலும் அடக்கத்தைக் கை விடாதவராக வாழக் கண்டேன்.

24. திராவிடர் கழகம் பிறந்தது

நீதிக் கட்சியின் மாநில மாநாடு

தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றைப் பாதிக்கும் நிகழ்ச்சியொன்ய சேலத்தில் நடந்தது. அது என்ன?

1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 12, 13 ஆம் நாள்களில் சேலத்தி. நடந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிக்கட்சி மாநாடாகும். அது பற்றிப் பல திங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

அவ்வாண்டு பிப்பிரவரி 13ஆம் நாள், சென்னை மாவட்ட நீதிக்க :) மாநாடு, அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் ஆர்வத்து . கூடிற்று.

சென்னை மாநாடு, ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் நடந்து வந்த கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யும்படி, சேலம் மாநாட்டிற்குப் பரிந்துரை செய்தது.

அதையொட்டிய பெயர் மாற்றத் தீர்மானத்தை சேலம் மாநாட்டி , அறிஞர் அண்ணா கொண்டு வந்தார். அதோடு வேறு வ தீர்மானங்களையும் கொண்டு வந்தார்.

திராவிடநாடு தீர்மானம்

அவற்றில் ஒன்று திராவிட நாடு பற்றிய தீர்மானம் ஆகும். ‘திராவிடர்கழகத்தின் முக்கிய கொள்கைகளில், திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கil. இல்லாததும், நேரில் பிரிட்டிஷ் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்டி , நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி நாடாகப் பிரிக்கப்ப வேண்டியது என்ற கொள்கை முதற் கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக கிறது என்று இந்த மாநாடு ஏக மனதாகத் தீர்மானிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/186&oldid=623083" இலிருந்து மீள்விக்கப்பட்டது