பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நினைவு அலைகள்

தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இசைந்து பேசி எடுத்த முடிவான முடிவின் அடிப்படையில் இவை கொண்டு வரப்பட்டன.

ύ7) σ5τσστσσσfl στσίστσστ?

இந் நிலைக்குப் பின்னணி என்ன? இந்தியாவின் வருங்கால அரசியல் அமைப்புப் பற்றி பிரிட்டானிய அரசுக்குப் பரிந்துரை கூற, சர். ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அக் குழு இந்தியாவிற்கு வந்து பல்வேறு கட்சிகளைக் கலந்து பேசியது.

நீதிக்கட்சித் தலைவர். ஈ. வெ. ராமசாமி, அக்குழுவைக் கண்டு திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தினார்.

ஆனால், கிரிப்ஸ் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. 1940 ஆம் ஆண்டும் 1943 ஆம் ஆண்டும் சென்னை மாகாண கவர்னரும், இந்திய வைசிராயும், ஈ.வெ.ரா.வை சென்னை மாகாணப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்கள். இரு முறையும் மறுத்துவிட்டார்.

ஆங்கில ஆட்சி, நிர்வாக இயந்திரத்தில் இருப்பவர்கள் அல்லது வெளியே இருந்து தொல்லை கொடுப்பவர்கள் ஆகியோரைக் கவனிக்கும்.

மேற்படி முடிவுகள் மிகத் துணிச்சலானவை; அதுவும் போர்க் காலத்தில், அரசு எவரையும் எளிதாகச் சிறையில் அடைத்துவிட உரிமை பெற்றிருந்த நிலையில், இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்ட பலர் பதறிப்போனார்கள்.

இயக்கத்தின் முன்னோடிகள் பலர், பல நாள் முன்னதாகவே சேலம் வந்து சேர்ந்தார்கள்; அவர்களிடையே ஓயாத ஆலோசனை; மாற்று முடிவுகள் தீவிரமாகச் சிந்திக்கப்பட்டன.

முடிந்தால், பெரியாரின் தலைமைப் பதவியைப் பிறருக்கு, மாற்றிவிடத் திட்டமிட்டவர்களும் உண்டு. *

அப்போது, மாயூரம் எஸ். வி. லிங்கமும், பூவாளுர் பொன்னம் பலனாரும் சேலம் வந்தார்கள். பழைய நட்பு பற்றி என் வீட்டில் தங்கினார்கள்.

அவர்கள் ஆலோசனையில் நான் கலந்து கொண்டது இல்லை ஆனால், அவர்கள் உரையாடல்களில் இருந்து அறிஞர் அண்ணாவின் மதிப்பீட்டைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/188&oldid=623085" இலிருந்து மீள்விக்கப்பட்டது