பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நினைவு அலைகள்

பணியிலும் உங்களுடையது மிக உயர்ந்தது. எனினும், இப்போதைக்க இராவ்சாகேப் பட்டம் வேண்டாம்; பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று எழுதிவிட்டேன்.

‘'நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. உங்களை போன்றவர்களின் உழைப்பே நான் இராவ்பகதூர் பட்டம் பெ உதவியது. உங்களுக்கு இராவ்சாகேப் கொடுக்க நினைத்ததைதி தடுத்திருக்கக்கூடாது’ என்றார்.

‘என் சொல்வேன்! தமிழர்களின் தரித்திரபுத்தி என்று மேலதிகா யிடம் சொல்லத் துணிவில்லை; அத் தீங்கைப் பொறுத்து கொண்டேன்; வேறு வழி?

அது ஒத்திகை; பிற்காலத்தில் அடுத்தடுத்து உரிய பாராட்டுத.ை இழப்பதற்கு ஒத்திகை.

அத்தகைய இழப்பால், மனமுடையாது, உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாது, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மக்கள் தொண்டாற்றப் பக்குவப்படுத்தும் நிகழ்ச்சி அது என்பதை அன்று அறியேன்.

பிரதமர் - குடியரசுத் தலைவர் பாராட்டு

பத்தாண்டுகளுக்குப் பிறகு, காலத்தின் கட்டாயம், ஏழை பங்காளன் காமராசரை சென்னை மாநில முதல் அமைச்சராக்கியது.

அதே காலத்தின் கட்டாயம், மாநிலப் பொதுக்கல்வி இயக்கும் பதவியில் எதிர்பார்த்ததற்கு முன்பே, திடீரெனக் காலி ஏற்படுத்தியது

பலரைப் பற்றியும், நல்லதும் கெட்டதும் கேட்டு வைத்திருந்த காமராசர், எதிர்பாராத எனக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார். சுதந்திரத்தையும் கொடுத்தார். தொகை எழுதாத காசோலை"யை கொடுத்துக் கல்வி வளர்க்கச் சொன்னார்.

பாடுபட மட்டுமே தெரிந்த எளியேன், அதில் மூழ்கி வெற்றி பெற்று. வந்தேன்.

கல்வி வளர்ச்சிக்குத் துாண்டுகோலாக மட்டுமே முதலில், பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டம் காமராசர் ஆணைப்படி தொடங்கப்பட்டது.

அதன் சிறப்பு அதை நடத்தியவர்கள், உள்ளுர் மக்களின் குழுக்கவே பொதுமக்களின் ஈடுபாட்டோடும், நன்கொடையோடும் ஒத்துழைப்போடும் செயல்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/192&oldid=623090" இலிருந்து மீள்விக்கப்பட்டது