பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நினைவு அலைகள்

-

முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ அதுபற்றி மூச்சு விடவில்லை

எனினும், இரண்டு நாள்களில் பெரியவர் ஒருவர் வழியாகத் தகவல் கிடைத்தது.

அப்போது கல்விச் செயலராக இருந்த திரு கே. சீனுவாசனுக்கு அப்பரிந்துரையைப் பொறுக்க முடியவில்லை.

டில்லிக்குச் சென்றார். தமிழ்நாட்டுப் பேராசிரியர் ஒரு வயை அணுகினார். அவர் உத்தமர்; அவர் தீங்கு செய்வதற்கு ஒப்பவில்லை.

பிறகு பார்ப்பனரல்லாதார் ஒருவரை அணுகினார்; அவர் மிகுந்த ஆர்வத்தோடு தலை இட்டார்.

என்ன முயன்றும் - கொடுப்பதைத் தடுக்கமுடியவில்லை பத்மபூஷன் பட்டத்தை பத்மஸ்ரீ ஆகக் குறைக்கும் அளவு வெற்றி பெற்றார்.

அந்தச் சதி நடக்கையில், ஒவ்வொரு நடவடிக்கையும் எனக்குத் தெரிந்தது. திரு காமராசரிடமோ திரு சி. சுப்பிரமணியத்தினிடமோ சொல்லியிருந்தால் சதி முறியடிக்கப்பட்டிருக்கும்.

போதிய நெருக்கமும் அடிக்கடி காணும் வாய்ப்பும் பெற்றிருந்தும் அவர்களிடம் சொல்லவில்லை.

‘தன் நலனைப் பொறுத்தமட்டில், தாமரை இலைத் தண்ணியாக வாழவேண்டும் என்ற லட்சியத்தால், அந்தச் சதியை வெல்ல விட்டுவிட்டேன்.

பாரதியார் விருது பறிக்கப்பட்டது

அடுத்து, திரு மீ. பக்தவத்சலனார், பாரதியார் சங்கத் தலைவராகவும் திரு ஆக்கூர் அனந்தாச்சாரியார்.அதன் செயலாளராகவும் இருந்த காலம்

அப்போது, இராணிப்பேட்டை, விடுதலைப் போராட்ட வியர், சிறை சென்ற தியாகி திரு கே.ஆர். கல்யாணராம அய்யர், எனக்குதி தெரியாமலே, அனந்தாச்சாரியாருக்குப் பரிந்து எழுதினார். என்ன பரிந்துரை?

‘பள்ளிகள் வாயிலாகவும், பொது மேடைகள் வழியாகவும் பல்லாண்டுகளாக, பாரதியார் பாடல்களைப் பட்டிதொட்டி எங்கும். பரப்பி வரும் நெ.து. சுந்தரவடிவேலுவின் தொண்டு போற்றத்தக்கது பாரதியார் சங்கம் அவரைப் பாராட்டி விருது அளிக்க வேண்டும். இது அவருடைய பரிந்துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/194&oldid=623092" இலிருந்து மீள்விக்கப்பட்டது