பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1832 நினைவு அலைகள்

அவர் என்பேரில் வைத்த நம்பிக்கை, நடக்காதவற்றை ந1 . வைத்தது. பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

அடுத்த நாளே புறப்பட்டு, நாலா பக்கமும் சென்றேன். ஆய்வாளர்களையும் ஆசிரியர்களையும் கலந்து பேசினேன். எந்தப் பேரூர்களில் பொது மக்கள் ஒத்துழைப்பும் ஆசிரியா ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று கண்டு கொண்டேன்.

ஒசூர் முதல் பரமத்தி-வேலூர் வரை, பள்ளி பாளையம் முத. ஆத்துார் வரை ஊர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அந்தந்த ஊர்களில் பகல் உணவுக் குழுப் பட்டியலையும் ஆயத்த.). செய்து கொண்டேன்.

இரண்டு பட்டியல்களும் ஆயத்தமான வேளை, அரசு ஆனையில் படிவம் முறைப்படி எனக்கு வந்து சேர்ந்தது.

ஏன் அவ்வளவு தாமதம் 2 ஆனை முதலில் பொதுக்கல்வி இயக்குநரகத்திற்குச் சென்றது. அங்கிருந்து படிகள் எடுத்து எல்லா அலுவலர்களுக்கும் அனுப்ப பட்டது. எனவே தாமதமாயிற்று.

கட்டாய இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கா ஊர்கள் பட்டியலையும் பகல் உணவுக் குழு பட்டியலையும் , , நாச்சியப்பருக்கு அனுப்பிவைத்தேன்.

அதில் அவருடைய எதிர்க்கட்சிக்காரர்கள் செல்வாக்கு பெற்றிரு. ஊர்களும் இடம் பெற்றிருந்தன.

சலகண்டபுரம், அரூர், தாரமங்கலம் ஆகியவை நினைவுக்கு வருகின்றன.

நாச்சியப்பர், என் ஆலோசனையை முழுமையாக ஏற்றும் கொண்டார்.

அதை ஒட்டி, உரிய தீர்மானங்களைப் போட்டு அனுப்பினார்.

கட்டாய இலவசக் கல்வி நுழைவு ஒவ்வோர் ஊரிலும் விழாவா வ கொண்டாடப்பட்டது.

ஒன்றிரண்டு தவிர, எல்லா ஊர்களுக்கும் நாச்சியப்ப கவுண் , I, நானும் கலந்து போனோம்; பொதுக் கூட்டங்களில் பேசினோம்.

பாரதி பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் தாராளமாகப் பயன்படுத்தினேன். பொதுமக்களிடம் விழிப்பை உண்டாக்கினோ ஆர்வத்தைப் பொங்க வைத்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/198&oldid=623096" இலிருந்து மீள்விக்கப்பட்டது