பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நினைவு அலைகள்

மேச்சேரி குழுவின் தலைவர் திரு சேர்வராயகவுண்டர் என்று நினைவு.

அயோத்தியா பட்டணத் தலைவர் பெயர் நினைவுக்கு வரவில்லை அவர் ஒரு கருணிகர் என்பது மட்டும் நினைவு வருகிறது.

இவர்கள், எதற்காகவும் உதவி கோரி என்னிடம் வராதவர்கள். எனவே ஒருவர் பெயர் மட்டுமே நினைவு வருகிறது.

புகார் ஒலி

நாச்சியப்பர், அரசு அலுவலரிடம் இவ்வளவு நம்பிக்கை வைப்பதும், அவருக்குத் தாராளமாக இவ்வளவு உரிமை கொடுப்பதும் அருமை.

எனக்குக் கொடுத்த அளவு உரிமையை வேறெவருக்கும் அவர் கொடுத்தது இல்லையாம்.

இத்தனைக்கும் நான் அவர் வீடு தேடிச் சென்றது இல்லை.

ஆனால், வெளியூர்களில் இருவரும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம் அதன் விளைவாக என் அணுகு முறையிலும் சொல் திறனிலும் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.

இச் செய்தி எங்கும் பேசப்பட்டது. அலுவலர் வட்டாரங்களிலும் பரவிற்று.

கோவை, மண்டலப் பள்ளி ஆய்வாளர் திரு வி.ஆர். அரங்கநாத முதலியார் ஒருமுறை என்னைப் பார்த்து,

‘நீங்கள் நாச்சியப்பரோடு கைகோர்த்து நெருக்கமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்’ என்று புகார் ஒலியில் கூறினார்.

‘முற்றிலும் உண்மை அய்யா! ஆனால், இருவர் கரங்களும் தூய்மையானவை. அதைப்பற்றி வேறு விதமாகக் கேள்விப்பட்டால் சொல்லுங்கள் என்றேன்.

‘இருவருமே அப்பழுக்கு இல்லாதவர்கள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்; அவர் காங்கிரசுத் தலைவராயிற்றே என்றார்.

‘அது அவரைப் பொறுத்தது. அவரது உதவி, கல்வி வளர்ச்சிக்கு நிபந்தனையின்றிக் கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்திக் கொள் வதுதானே அறிவு உடைமை’ என்றேன்.

“ஆம்” என்று அவர் சொன்னது எனக்கு நிறைவைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/200&oldid=623099" இலிருந்து மீள்விக்கப்பட்டது