பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நினைவு அலைகள்

‘என்ன பிராமண சங்கம் உயர்நிலைப் பள்ளி நடத்த ஒப்புதல் தரும்படி இவ்வளவு தூரம் பரிந்துரைக்கிறீர்களே! என்று குறைபட்டார்.

‘உடனடித் தேவை உயர்நிலைப் பள்ளி இடங்களை அதிகப் படுத்தல். பிராமணர்கள் முன்வந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்வது பொது நன்மைக்கு மிகவும் ஏற்றது.

‘ஆர்.வி.கி. பொறுப்பில் குற்றங்கள் புகா. அவர்கள் பையன்களுக்கே இடங்கொடுத்தாலும் பெருங்கேடு விளையாது. அந்த அளவிற்கு இட நெருக்கடி குறைவது உறுதி; பரிந்துரை பெற முடியாதவர்களும் எளிதாக மற்ற பள்ளிகளில் சேரக்கூடும்’ என்றேன்.

“சும்மா கேட்டேன்! உங்கள் பரிந்துரையை ஆமோதித்து உடனே இயக்குநருக்கு அனுப்பி விட்டேன். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யர் சொல்லிவிடலாம்’ என்றார்.

இது நடந்தது ஒரு கல்வி ஆண்டின் நடுவில்.

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கும் வகையில், உரிய நேரத்தில் ஒப்புதல் கிடைத்தது.

பெரியவர் திரு ஆர். வி. கிருஷ்ண அய்யர் என்னைத் தேடி வந்து நன்றி கூறிவிட்டுச் சென்றார்.

அப் பள்ளி, பாரதி வித்யாலயம் என்ற பெயரில், இன்றும் நடந்து வருகிறது; மேனிலைப் பள்ளியாகச் செயல்படுகிறது; பிராமன சங்கத்தின் சார்பில் நடந்தது மாறி, வேறொரு கல்விக் குழுவின் சார்பில் நடந்து வருகிறது.

26. துணிவு குறையவில்லை

குமாரசாமி ராஜாவோடு

திரு நாச்சியப்ப கவுண்டர் நாட்டுப் பற்றாளர் மட்டுமல்லர்; மனித இனப் பற்றாளர்; அப் பற்றை வளர்க்கும் சாரண இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்; சென்னை மாகாண சாரண இயக்கத்தின் துணை (அளபிஸ்டெண்ட்) ஆணையர்களில் ஒருவராக அவர் பல்லாண்டு செயல்பட்டவர்.

நான் சேலத்தில் அலுவல் பார்க்கையில், அவர் ஏற்காட்டி ன் மாவட்டச் சாரண ஆணையர்களின் பாசறை ஒன்றைச் சிறப்பா, நடத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/204&oldid=623103" இலிருந்து மீள்விக்கப்பட்டது