பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 189

அப் பாசறைக்கு வந்தவர்கள் கூடாரங்களில்தான் தங்கவேண்டும்.

அப்போது, இராசபாளையம் திரு பி.எஸ். குமாரசாமி ராஜா இராமநாதபுரம் மாவட்டச் சாரண ஆணையராக இருந்தார். அவர் ஏற்காட்டிற்கு வந்து பாசறையில் பங்கு கொண்டார்.

நாச்சியப்பரின் அழைப்பின் பேரில் நானும் அங்குச் சென்று ஒரு நாள் சாரணர் பாசறையில் தங்கி இருந்தேன்.

அப்போது எனக்கும் குமாரசாமி ராஜாவுக்கும் ஒரே கூடாரத்தில் இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மூத்தவராகிய அவர்-காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகிய அவர்-என்னிடம் பாசத்தோடு பழகினார், கலகலப்பாகப் பேசினார்.

பிற்காலத்தில் அவர் சென்னை மாகாண முதலமைச்சராவார், அப்போது துணை இயக்குநராக உயர்ந்துவிட்ட என்னை அடையாளம் கண்டு கொள்வார், கூடார வாழ்வை நினைவு படுத்துவார் என்று கூடாரத்தில் இருக்கையில், நான் நினைத்துப் பார்க்கவில்லை.

அந்தச் சாரண இயக்கத்தின் மாகாண ஆணையராக என்னை அழைப்பார்கள்; அதில் தொடர்ச்சியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிய நேரிடும்,

அப்புறம், நான் அரசு ஊழியன் என்ற பரிதாப நிலையைப் பயன்படுத்தி, அப் பதவியில் இருந்து என்னை விலகிக் கொள்ளும்படி, கல்வி அமைச்சர் பக்தவத்சலம் ஆணையிடுவார்,

அவ்வளவு நீண்ட பணிக்கு உரிய வெள்ளி யானைப் பரிசைதில்லித் தலைமை நிலையம் அனுப்பியதை அப்படியே அழுத்தி வைப்பார்கள் என்று அன்று ஏற்காட்டில் கனவு காணவில்லை.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தானேவந்த பணிகளை வற்றுச்செய்ய, அது என்னை எங்கெங்கோதள்ளிக் கொண்டு போயிற்று; இன்றும் தள்ளிக் கொண்டிருக்கிறது.

கருத்து உரிமை

நான் சேலத்தில் பணி புரிகையில் பொதுக்கல்வி இயக்குநர், உயர்நிலைப் பள்ளிப் பாடத் திட்டத்தில் சிறிய சீர்திருத்தம் ஒன்றை அறிவித்தார்.

அது என்ன?

உயர்நிலை வகுப்புகளில் வாரந்தோறும் சில பீரி டு கள் கைத்தொழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/205&oldid=623104" இலிருந்து மீள்விக்கப்பட்டது