பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 நினைவு == | லைகள்

என்ன கைத்தொழில்கள்? கைத்தறி நெசவு, தச்சு.வேலை, தையல், காய்கறித் தோட்டம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யும்படி அறிவிப்பு வந்தது.

அவ் வறிவிப்பு வந்த அன்று மாலை, எடப்பாடி பள்ளிக்கூட ஆண்டு விழா நடந்தது.

நாச்சியப்ப கவுண்டரும் நானும் அதில் கலந்து கொண்டோம். என் உரையில், பள்ளிப் படிப்பில், கைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதை விளக்கமாக வரவேற்றேன்.

ஆனால், பெரிய கேள்வி ஒன்றைத் துணிந்து எழுப்பினேன்.

‘நம் இளைஞர்களுக்கு இந்தக் காலத் தொழில்களைக் கற்றுக் தரக்கூடாதா? புதிய பட்டறைத் தொழில், மின்கம்பி இணைப்பு வேலை, அதிக நுட்பமில்லாத பொறியியல் ஆகியவற்றைப் பயின்று கொள்ள அவர்களால் முடியாதா? என்று பொதுமேடையின் கேட்டேன்.

‘இளங்கன்று அச்சமறியாது ‘ என்பதை மெய்ப்பிக்கும் வகையின் ‘பிரபேசனில் இருந்தபோதே, இயக்குநர் அறிவிப்பு பற்றி இப்படித் துணிந்து கேட்டுவிட்டேன்.

அது அடுத்த நாள், மெயில் நாள் இதழில் கொட்டை எழுத்துகளில் வெளியாயிற்று.

அப்போது, எனக்குச் சற்றுக் கவலை ஏற்பட்டது. ‘கல்வித்துறையின் ஒழுங்கிற்கு முரண்பாடு அல்லவா? என்று எண்ணித் திகைத்தேன்.

ஆனால், கல்வித் துறை என்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை. பரிவாலா? பாராமுகத்தாலா? இல்லை.

அந்தக் காலத்தில் கல்வியாளர்கள், மறைக்காமல் கருத்து தெரிவிப்பதை எதிர்பார்த்தார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அரை வேளை படிப்பு முறையை முதல்வர் இராசாசி கொண்டு வந்தார்.

அப்படி ஆணையிடுவதற்கு முன்பு, நான் அதற்கு எதிரான குறிப் | ஒன்றை எழுதிக்கொடுத்தேன். சிறிது கால தாமதத்திற்குப் பின், இராசாசி அதைத் தெரிந்துகொண்டார்.

ஆனால், என்னைத் தண்டிக்கவில்லை: வெகுளக்கூட இல்லை மாறாக, என் திறமையையும் பாராட்டி, கோப்பு ஒன்றில் பதிந்து வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/206&oldid=623105" இலிருந்து மீள்விக்கப்பட்டது