பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நினைவு அ ை

‘சாதாரனப் படிப்புடைய நான், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆணையிட நேரிடும்போது பெரிதும் வருந்துகிறேன். கல்லுப் பேராசிரியர்களுக்கு ஆணையிட எனக்கு வாய் வராதே!

“வள்ளல் பெருமான் ஒரு நாள் உங்கள் விருப்பத்திற்கும் வ|| காட்டுவார். எங்கள் குடும்பத்தில் எவராவது ஒரு நல்ல பிள்ளை, பட்டம் பெற்று, பண்பட்டு வரட்டும். அவரை வைத்துக்கொண்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்!”

அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றினார். எப்படியென்று. பின்னர், உரிய இடத்தில் விரிவாகக் கூறுவேன்.

தகாத உறவு

பொது ஊழியத்தில் இருப்பவர்கள்மேல், மெய்யாகவும் புகா வரும்; பொய்யாகவும் வரலாம்.

அத்தகைய புகார்களைவிட விசாரிப்பதில் தேவையான மlை, . தன்மை தேவை.

விசாரிக்கப்படுபவரை அதிகமாக மிரட்டினால் அல்லது இழிவு படுத்திவிட்டால், அது மற்ற அரசுப் பணியாளர் இடையே பீதியையும் கசப்பையும் வளர்த்துவிடும்.

அதனால், பணியாளர்கள் வெறும் ‘முன் பளு பின் பளு கற்களாக மாறிவிடுவார்கள்.

சேலம் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தபோது, நா. பொல்லாத புகார் ஒன்றை விசாரிக்க நேர்ந்தது.

‘ஒசூரில் பள்ளி ஆய்வாளர், அங்கு மாறுதல் ஆகிவரும்பேது முந்தைய சரகத்தில் தொடர்பு கொண்ட ஒர் ஆசிரியையை அழைத்த வந்துள்ளார்.

‘தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த அம்மாளுக்கு ஊராட் பள்ளி ஒன்றில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அவவே , தொடர்பு வைத்துள்ளார். பல ஊர்களுக்கு அழைத்துக்கொண் , போனார் என்று புகார் எழுதியவர்கள், ஊர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

அத்தகைய அசிங்கமான புகாரை அப்போதுதான் முதன்முறை கண்டேன். கலக்கமடைந்தேன்.

‘உண்மை புலப்பட வேண்டுமே நீதி வழங்கப்பட வேண்டு ப. தேவைக்கு மேல் ஆய்வாளருக்குப் பழி ஏற்படாது இய, . வேண்டுமே!’ என்று கலங்கினேன். சிலநாள் என் தூக்கம் கெட் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/208&oldid=623107" இலிருந்து மீள்விக்கப்பட்டது