பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நினைவு அலைகள்

‘இப்போது அவன் ஒரு பாவமும் அறியாதவன் என்பது புலப்பட்டுவிட்டது. இது தியாகராயபிள்ளையின் பணம். அவர் அதை இரகசியப் பதிவு ஏடுகள் வைக்கும் பெட்டியில் பதுக்கி வைத்திருக்கிறார்’ என்று சொன்னார்.

கடைநிலை ஊழியர் பழனியை அழைத்தேன். ‘காணாமற் போன நூறு ரூபாய் இதோ பெட்டியில்; நீ கவலைப் படாதே!’ என்றதும் பழனியின் முகம் அன்றலர்ந்த தாமரையாக ஒளி விட்டது.

பல நாள்களாக அவர் ஏக்கத்தில் இருந்ததற்கும் காரணம்

சில ஆண்டுகளுக்கு முன் பழனி இறந்துவிட்டார். இவர் பிள்ளை வேலைக்குத் திண்டாடினார்.

என்னால் அவருக்கு வேலை வாங்கித்தர முடியவில்லை. இன்றும் திண்டாடுகிறாரோ என்னவோ?

உயர்நிலைப் பள்ளிக்கு ஊரார் உதவி

சேந்தமங்கலம் என்ற ஊரில், காலம் சென்ற இயக்குநர் சர் மெவால் ஸ்டேதம் நினைவு நிதிக்குப் பணம் திரட்டும் பொருட்டு அவ்வூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அந் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவதற்காக நான், நாமக்கள் ஆய்வாளர் ஆராவமுத அய்யங்காருடன் அங்குப் பகல் 10 மணிபோல் போய்ச் சேர்ந்தேன்.

வேறு இடம் இல்லாமையால், ஊராட்சி அலுவலகத்தில் நான்தங்க ஏற்பாடு செய்தார்கள். o

அப்படித் தங்கியிருக்கையில், ஊராட்சித் தலைவர் அங்கு வந்து சேர்ந்தார்.

எனக்கு மாலை யணிவித்து, வரவேற்புக் கூறினார். அவர் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்; உடையார்’ என்பது அவருடைய பெயர்.

உரையாடலின்போது, ‘சேந்தமங்கலம் போன்ற பெரிய ஊருக்கு உயர்நிலைப் பள்ளி தேவை. அதற்குத் தேவை அய்ந்து ஏக்கர் நிலக்கொடை மூன்று ஆண்டு நிகரச் செலவிற்காக ரூபாய் அய்யாயியம் கட்டவேண்டும். இவை பெரிய பளு அல்லவே! ஏன் இவற்றைத் தந்து உயர்நிலைப் பள்ளியைப் பெறக்கூடாதா?’ என்று கேட்டேன்.

உடையார் நாட்டுப்புற பாணியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/212&oldid=623112" இலிருந்து மீள்விக்கப்பட்டது