பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 205

அம்முறையை மதுரை மாவட்டத்திலும் செயல்படுத்த முடியும் -ான்று கருதினார்.

எனவே, ஆட்சிக் குழுவின் துணைத்தலைவரிடம் அத் திட்டத்தைச் சொன்னார்; அதை ஆதரிக்கச் சொன்னார்; வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.

துணைத் தலைவர் எவர்? திரு. லெ. பசுபதி அவர்கள்.

அவர் தந்தையார் நாமக்கல்லில் வழக்குரைஞராக விளங்கிய திரு. வெங்கடபதி முதலியார் ஆவார்.

அவர் சாதிப் பிரிவுகளைக் கலைக்க முயன்ற தன்மான மயக்கத்திற்குத்துணையானவர். பெரியாருக்கு வேண்டியவர். சர்.பி.டி. மாசனின் அக்காளை மணந்தவர்.

என் கல்லூரிப் பருவத்திலேயே திரு. பசுபதி எனக்கு அறிமுகமானவர்; அப்போது நாங்கள் அடிக்கடி கண்டு உறவாடுவோம். பழைய நண்பனோடு புதிய உறவில் தொடர்பு கொள்வது எளிதாகவும் வரிமையாகவும் இருந்தது.

பக பதியும் நானும் பல ஊர்களுக்குச் சென்றோம்; குறிப்பாக, | லவசக் கட்டாயக் கல்வி நடைமுறையில் இருந்த ஊர்களுக்குச் செங்றோம்.

பள்ளிகளைப் பார்வையிட்டோம்; பொதுக்கூட்டங்கள் கூட்டி _ாயாற்றிக் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு திரட்டினோம். ஆசிரியர்

அளிக்குத் துணையைப் பெற்றோம்.

பசுபதி நீதிக்கட்சியைச் சேர்ந்தவர். எனினும் என்னிடம் கட்சிச் சாரிபை எதிர்பார்க்கவில்லை.

பிற்காலத்தில் அமைச்சர்களாக உயர்ந்த திருவாளர்கள் கக்கன், மாசாாாம் நாயுடு ஆகியோர்.அப்போது மதுரை மாவட்ட ஆட்சிக் குழு _றுப்பினர்கள். அவர்களோடு நான் சில ஊர்களுக்குச் சென்றேன்; பல பள்ளி விழாக்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசினேன்.

மேலுாரில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவள்ளுவர் விழாவில், திரு. _னோடு ஒரே மேடையில் நான் பேசியது நினைவிற்கு வருகிறது.

அமெரிக்கன் கல்லூரியில் சொற்பொழிவு

கல்வி நிலைய இலக்கிய மன்றங்கள் போட்டி போட்டுக் கொண்டு _ள அழைத்தன.

வெறும் மாவட்டக் கல்வி அதிகாரியாகிய என்னை அமெரிக்கன் _வாரித் தமிழ் மன்றம் நிறைவு விழாவிற்கு அழைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/221&oldid=623122" இலிருந்து மீள்விக்கப்பட்டது