பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 நினைவு அலைகள்

கூழாங் கற்கள் நிறைந்த பெரும் பரப்பில் சில ஏக்கர்களில் திராட்சையும் சாத்துக்குடியும் பயிரிடப்பட்டிருந்தன.

இன்று திண்டுக்கல் முதல் கொடைக்கானல் சாலைவரை. பல்லாயிரம் ஏக்கர் பரப்பிற்குத் திராட்சை பயிராகியது.

மதுரை மாவட்டத்தில் திராட்சைப் பயிரை முதலில் அறிமுகம் செய்தவர் திரு. செளந்தரபாண்டியன் ஆவார்.

அதற்காக, புஞ்சை நிலத்தில் இருந்த சிறு கூழாங்கற்களைப் பொறுக்கி எடுக்க மட்டும் மூவாயிரம் ரூபாய் பிடித்ததாம்.

மூன்று ஏக்கர் நிலத்தில் கற்களைக் களைய அவ்வளவு செலவு செய்ததை, பணக்கொழுப்பு’ என்று துற்றியவர்கள் பலர் ஆவார்.

அவர் செய்த பெருஞ்செலவு ஏற்ற பழி, எத்தனையோ ஊர்களின் நிலையை மாற்ற உதவிற்று.

எவராவது ஒருவர், மெழுகு வத்தியாகி எரிந்தால்தான். எண்ணற்றவர்களுக்கு ஒளி கிடைக்குமென்ற பாடம் என் நெஞ்சில் பதிந்தது.

உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத ஊர்களில் புதுப் பள்ளிகள் திறக்கலா மென்ற முயற்சிகளுக்குப் பொதுமக்கள் நல்ல ஆதரவு தந்தார்கள்.

பத்து ஊர்கள்போல் வேண்டிய நிலமும் கட்டடமும் செலவுத் தொகையும் கொடுக்க முன்வந்தன.

மாவட்ட ஆட்சிக் குழு கலைக்கப்பட்டது

மாவட்ட ஆட்சிக் குழு அலுவலகத்தில் இருந்து உரிய மனுக்களை எதிர்பார்த்து இருந்தேன். அப்போது இடி வீழ்ந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சிக் குழுக்களைக் கலைத்து விட்டு, மாவட்ட ஆட்சியாளரிடம் அவற்றை விரைவில் ஒப்படைக்கும் ஆணையை அரசு பிறப்பித்தது.

ஆட்சியாளர் சார்பில் புதிய பணியைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

அப்படி நடந்த சில நாள்களில், தனி அலுவலர் என்னைத் தேடி வந்தார்; அலுவலகத்தில் என்னுடன் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/224&oldid=623125" இலிருந்து மீள்விக்கப்பட்டது