பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற து சுந்தாவடி வேலு 211

இருவரும் இன்று இல்லை; முதலில் அம்மை யாரும், பின்னர் I_ாகி ரும் மறைந்தனர்.

அவர்கள் இருவருமே நல்ல தொண்டு புரிந்த கிறுத்தவர்கள். அவர்களுடைய மக்களில் ஒரு மகள் ஜாம்பியாவில் அலுவல் பாகிறார்.

கு|முந்தைப் பருவத்தில் அறிமுகமான அவர் சென்றமுறை இந்தியா வி|கு வந்தபோது சென்னையில் எங்களைத் தேடிவந்து, _ண்டுவிட்டுப் போனது நெகிழ்விக்கிறது. என்ன பாச உணர்வு

மொட்டைக் கடிதம்

திருவாளர் தி. ச. அவிநாசிலிங்கனார் கல்வி அமைச்சரானபோது, ஆய்வாளர்கள் மீது ஊழல் புகார் வந்தால், அதை நேரே மாவட்டக் _வி அலுவலருக்கு அனுப்பிக் கருத்துக் கேட்கும் முறையைக் கொண்டுவந்தார்.

அது கட்டுக்கோப்பைக் குலைக்கும் என்று அப்போதைய பொதுக்கல்வி இயக்குநர் சுட்டிக்காட்டியதால், காலதாமதத்தைத் விக்க, புகாரை நேரே அனுப்புவதென்றும், ஆனால் ஆய்வுரையின் மூலப்படி மட்டும் இயக்குநர் வழியாகவே வரட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

டியக்குநருக்கு அனுப்பும் மூலத்தின் படியை நேரே அமைச்சருக்கு அறுப்பவேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது கிலியை அாக்க உதவியது.

ஆய்வாளரைக் கண்டிக்க, தண்டிக்கக உரிமை உடையவர் துணை மயக்குநர்.

கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டவர் இயக்குநர்.

அவர்களை நம் பாது, அமைச்சரே கண்காணிக்கும் நிலைக்குத் _ாIAதிக் கொண்டது, இந்திய நிர்வாகம் கெட்டதற்கு ஒரு காரணம்.

உயர் கொள்கைகளைக் கவனிக்க வேண்டியவர்கள், கீழ் மட்ட ஆளிகளைக் கண்காணிப்பவர்களாக மாறியது நல்ல மரபு அல்ல.

| ன் மதுரையில் சேர்ந்த சில வாரங்களில் அப்படியொரு அகயெழுத்து இல்லாத புகாரை அமைச்சர் எனக்கு அனுப்பி விசாரித்துக்

கருAது கூறும்படி கட்டளையிட்டார். புகார் என்ன?

குறிப்பிட்ட ஆய்வாளர், தன் தணிக்கையின் கீழ் வரும் பள்ளிகளில் கையூட்டுத் தராவிட்டால், தாறுமாறாக எழுதுகிறார்: மானியங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/227&oldid=623128" இலிருந்து மீள்விக்கப்பட்டது