பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நினைவு அலைகள்

அளிப்பதில் காலதாமதம் செய்கிறார். இப்படிப் பொதுவாக இருந்தன ஒரே ஒரு பள்ளியின் பெயர் மட்டும் குறிக்கப் பட்டிருந்தது. அதன் பேரில் என் கருத்தைக் கேட்டிருந்தார்கள்.

இவற்றை மனத்தில் வைத்துக்கொண்டு அவரது சரகத்தில் தனியா நிர்வாகத்தின் கீழ் நடந்த பள்ளிகள் சிலவற்றை முன் அறிவிப்பின்றிப் பார்வையிட்டேன்.

அய்யப்பாட்டிற்குச் சிறிதும் இடம் கிடைக்கவில்லை. பெயர் குறிக்கப்பட்டிருந்த பள்ளி சின்னமனூரில் இருந்தது ‘குருக்கள் பள்ளி’ என்று அழைக்கப்பட்டது.

அதை பார்வையிட்டு, பழைய குறிப்புகளையும் புரட்டி ப் பார்த்தேன்.

ஒர் ஆதிதிராவிடப் பையன்கூடப் படிக்காத ஈராண்டுகளில் தணிக்கைக் குறிப்புகளில் ஆதிதிராவிடர்களுக்கும் இடம் உண்டு . என்று எழுதிய அதே ஆய்வாளர், மூன்றாம் ஆண்டில் மூன்று ஆதிதிராவிடர்கள் வந்திருந்தபோது, பெயரளவில்தாய் ஆதிதிராவிடர்களுக்கு இடம்’ என்று குறை கூறி இருந்தார்.

புகாரில் இதைச் சொல்லி, அதற்குக் காரணம், கையூட்டு எதிர்பார்ப்பு என்று எழுதப்பட்டிருந்தது.

பள்ளிக்கூட நிர்வாகி அதை உறுதிப் படுத்தினார். பனம் கேட்டதற்குச் சாட்சி இல்லை என்றார். -

இப் பள்ளிக்கூடத் தணிக்கைக் குறிப்பு அய்யப்பாட்.ை எழுப்புவதாகத் தோன்றினும், அந்த ஒன்றைக் கொண்டே ஆய்வாளர் ஊழல் பேர்வழி என்று திட்டவட்டமாகச் சொல்ல இயலாது.

மனிதர்கள் குரங்குப் போக்கினர். எக் காரணம் பற்றியாவது எரிச்சல் கொள்ளும்போது, வரம்புமீறி நடந்து விடுவது உண்டு.

ஏதோ எரிச்சல் பற்றிக் குறை சொல்லியிருக்கக்கூடும். ஆய்வாளர் அப் பகுதியில் மூன்றாம் ஆண்டு பணிக்காலத்தில இருப்பதால், அவரை வேறு சரகத்திற்கு மாற்றுவதற்குமேல் ஏதும் தேவையில்லை.

இப்படிக் கருத்துரைத்தேன். முதல் படியை இயக்குநர் வழியாக அனுப்பிவிட்டு, நகலை நேரே அமைச்சருக்கு அனுப்பினேன்.

சில நாள்களுக்குப்பின், சென்னையில் அமைச்சரைக் வ நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/228&oldid=623129" இலிருந்து மீள்விக்கப்பட்டது