பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நினைவு அலைகள்

வெங்கடாசலபுரத்திற்கு உயர்நிலைப் பள்ளி கேட்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் ஸ்ரீரங்காபுரத்தாரின் போட்டி உணர்வு மேலிட்டது.

அவ்வூர்க்காரர் ஒருவர் - திரு சீனிவாசன் - மதுரையில் வழக்குாைக ராக இருந்தார். அவரைக்கொண்டு மண்டல பள்ளி ஆய்வாளர் சாப நாயக்கரை அணுகினார்கள். தங்களுக்கு உயர்நிலைப் பள்ளியைக் கொடுக்கும்படி வேண்டினார்கள்.

மண்டல ஆய்வாளர் எனக்கு மேல் அதிகாரி. அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஸ்ரீரங்காபுரத்திற்குப் பரிந்துரைக்கச் சொன்னார்.

‘அவ்வூர், வெங்கடாசலபுரத்தைவிடச் சிறியது; அவ்வூரில் உள்ள பள்ளியில் அய்ந்து வகுப்புகளே உள்ளன; மாணாக்கர் எண்ணிக்கையும் குறைவு. அது முதலில், உயர்தொடக்கப்பள்ளியாவதே முறை. அதற்கு, வேண்டுமானால் பரிந்துரைக்கிறேன்’ என்றேன். அப்படியே வாங்கித் தந்தேன்.

மண்டல ஆய்வாளருக்குச் சிறிது ஏமாற்றம். ஆனால் என்மேல் கசப்பு ஏற்படவில்லை. என்னிடம் பரிவோடும் நல்ல எண்ணத்தோடும் தொடர்ந்து நடந்துகொண்டார். அப்பெருந் தன்மை போற்றற்குரியது.

எனக்குக் கிடைத்த பாராட்டு

வெங்கடாசலபுரத்திற்கு உயர்நிலைப் பள்ளி கிடைத்தது. அதைத் திறப்பதற்கு முன், நான் சென்னைக்கு மாறுதல் ஆகிவிட்டேன்.

சில வாரங்கள், சென்னை மாவட்டக் கல்வி அலுவலராக இருந்து விட்டு, பிறகு சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலராகச் செல். நேர்ந்தது.

அந்த வேலையில் இருக்கையில், அந்த உயர்நிலைப்பள்ளித் திறப்பு விழா வந்தது.

அப்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. ஏ.பி. ஷெட்டி திறந்துவைத்தார். அந்த விழாவில், வாழ்த்துரை கூறும் சிறப்பினை எனக்கு அளித்தார்கள்.

வெங்கடாசல புரத்தார் சிலர், சென்னைக்கே வந்து, என்னை வற்புறுத்தி இசைய வைத்தார்கள்.

விழாவிற்கு முன் விரைவாக வீரபாண்டியில் இருந்து வெங்கடாசலபுரத்திற்கு மண் சாலை ஒன்று போட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/234&oldid=623136" இலிருந்து மீள்விக்கப்பட்டது