பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 219

முன் இரவு மழையில் சாலை சேறாகிக்கிடந்தது. அதன் வழியாக, அமைச்சர் வுெட்டி, முன்னே சென்றார். அடுத்துச் சில கார்கள் சென்றன.

நான், ஒரு ஜீப்பில் சென்றேன். அது வழியில் புதையுண்டு ஊர் பபாய்ச்சேரக் காலதாமதம் ஆகிவிட்டது.

வெங்கடாசலபுரம் நுழைவாயிலில் அமைச்சர்களையும் மற்ற பெரியவர்களையும் ஊரார் நிறுத்தி நான் வரும்வரையில் காக்க வைத்துவிட்டார்கள்.

பதினைந்து மணித்துளிகளுக்குப் பின் போய்ச் சேர்ந்த நான், பெரியவர்கள் எனக்காகக் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டதும் என் அடி வயிற்றைக் கலக்கிற்று.

பதற்றத்தோடு அமைச்சரிடம் ஒடி, என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, மன்னிப்புக் கேட்டேன்.

‘பரவாயில்லை என்று மட்டுமே அவர் பதில் சொன்னார். விழா உரையாற்றுகையில், ‘இவ்வூரார், நெ.து. சுந்தரவடிவேலுவை உச்சிமேல் வைத்துப் போற்றுவது பொருத்தம்; அது ஊருக்குள் வந்த பிறகே புரிகிறது.

‘நெடுஞ்சாலைக்குத் தொலைவில் தடம் இல்லாத ஊரில், அவர்களாகக் கேட்டாலும் ஏதோ சாக்குச் சொல்லிப் பள்ளிக்கு மசைவை மறுத்துவிடுவதே இயல்பு.

‘ஆனால் இவரோ துணிந்து, தாமே முன்னின்று, உயர்நிலைப் பள்ளியை வாங்கித் தந்துள்ளார்.

‘குடியானவர்களுக்கு நன்றி உணர்வு அதிகம். அதன் எடுத்துக் காட்டே, நீங்கள் அவரை மறந்து விடாமல், சென்னையிலிருந்து அழைத்து வந்துள்ளது’ என்று அமைச்சர் பாராட்டினார்.

‘மற்ற அலுவலர்களும் இவரைப்போல் செயல்பட்டால், நாடு விரைவில் முன்னேறும் ‘ என்றும் என்னை அமைச்சர் ஷெட்டி பாபாட்டியது இன்றும் பசுமையாக உள்ளது.

திரு. ஷெட்டியின் நூற்றாண்டு 1983இல் நடந்தது. வெங்கடாசல புரத்து மக்களின் நன்றி உணர்வு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்பட்டது.

உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழாவிற்கு என்னை அழைத்து, _ா ஆற்றச் செய்தார்கள். மறதி மிகுந்த மக்கள் இடையே வெங்கடாசலபுரத்து ஆன்றோர்களும் வாழ்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/235&oldid=623137" இலிருந்து மீள்விக்கப்பட்டது