பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நிை / அலைகள்

1947 இல் இந்திய விடுதலையும் விளைவுகளும்

நான் மதுரை மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தபோது, இந்திய வரலாற்றில் வைர எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய பெரும் நிகழ்ச்சி நடந்தது.

தியாகம் வென்றது

காந்தியடிகளின் துரய தியாகத் தலைமையில் நடந்த, இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது.

திலகர், லஜபதிராய், வ. உ. சிதம்பரம் காலந்தொட்டு அலை அலையாகப் பல நூறாயிரவர் - பெண்கள் உட்பட- இடர்மிகு இருட்டுச் சிறைகளில் வாடி வதங்கியது பலன் கொடுத்தது.

ஞாயிறு மறையாத பேரரசைக் கொண்ட ஆங்கிலேயம். இந்தியாவிற்கு விடுதலை அளித்துவிட்டு, இந்திய மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

அப்படி வெளியேறிய வேளை நாட்டைப் பிரித்துவிட்டு, பகைப் புற்றை வளர்த்துவிட்டு விலகியது மிகவும் வேதனை தருவதாகும்.

எனினும் அத்தனை கணக்கு வழக்குகளையும் ஒழுங்காக இந்தியர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு விலகிக் கொண்டதை எண்ணி அவர்களைப் பாராட்டாமல் இருக்க இயலாது.

இந்தியா விடுதலை பெற்றது பற்றிப் பெரிதும் மகிழ்ந்தேன். ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தையாம் காந்தியடிகளின் சீரிய தலைமை, பல்லாண்டு தொடரும்; கடையரும் கடைத்தேற வழிவகை செய்யும்; தீண்டாமை தொலையும்; வறுமை ஒடும்; வளம் பெருகும்: அவாவின்மை தழைக்கும்’ என்று எதிர்பார்த்தோர் எண்ணற்றவர்.

அரசியல் உரிமை, பொருளியல் நீதியை, சமுதாய சமத்துவத்தைப் பெற விரையும் என்று எதிர்பார்த்த பல கோடி இந்தியர்களில் நானும் ஒருவன்.

‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ என்று பாரதி இடித்துக்கேட்டது, நம் தூக்கத்தைக் கலைக்கும்; பல நாள் கலைக்கும்; அதன் பயனாக,

‘முப்பது கோடியும் வாழ்வோம்’ என்று ஒவ்வொருவரும் சூளுரைக்கும் நிலை உருவாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/236&oldid=623138" இலிருந்து மீள்விக்கப்பட்டது