பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. ஒரு நாள் நீ இயக்குநர் ஆகிவிடுவாய்

பாரதியின் கனவு

ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்’ என்று கனவு கண்டார் மகாகவி பாரதியார்.

அந்தக் கனவு நனவாகிவிட்டதே! தன்னாட்சி இந்தியா பெற்றுள்ள பெருமளவு தொழிலில் வளர்ச்சியை அதே அளவில் எந்த நாடு பெற்றுள்ளது?

பல்லாயிரங்கோடி ரூபாய்களை முதலீடு செய்து, திரும்பிய பக்கமெல்லாம் இயந்திரத் தொழில்களை வளர்த்துள்ளோம்!

இதைக் கண்டு, பிறநாடுகள் வியக்கின்றனவே!

மக்கள் பெருக்கம்

இவ்வளவிற்குப் பிறகும். வறியோர் முன்னிலும் அதிகமாகப் பெருகியுள்ளதைக் கண்டு திகைக்கிறார்களே!

அப்படி நலியக் காரணம்?

நம் முன்னோர்கள், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடுபட்டும் 1911 இல் 33 கோடிக்கு மட்டுமே மக்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிந்தது

சாதனையாளர்களாகிய நாமோ, முப்பத்தைந்து ஆண்டுகளிai, அதை 68 கோடியாக்கியுள்ளோம்.

அரசுகளின் முயற்சிகளை முறியடிப்பதே நோக்கமாகக் கொண் வர்கள் போல் தோன்றவில்லையா?

பிற வளர்ச்சிகள் எவ்வளவு பெரியனவானாலும் கட்டுக்கு அடங்காத மக்கள் பெருக்கம் வளர்ச்சியின் பலனைப் பாழாக்குகிறது.

பெரு மலைகளில் நெடு மரங்களையும் பள்ள வயல்களில் நெற்பயிரையும் வளர்த்தல் அடிப்படை வேளாண்மை அறிவாகும்

மக்கள் தொகை மிகுந்த, பல தலைமுறையாக முழு வேலை இல்லாத, கோடிக்கணக்கான மக்களை உடைய இந்தியாவில் வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்

அதைப் பற்றிப் போதிய நாட்டம் செலுத்தாததால் தொழில்கள் பெருகின அளவு, வேலை வாய்ப்புகள்-அடிநிலை வேலைகள் பெருக்கம்-ஏற்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/240&oldid=623143" இலிருந்து மீள்விக்கப்பட்டது