பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நினைவு அலைகள்

தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே, அழித்துக் கொள்ளுகிறோம் என்று அறியாத அப்பாவிகள், அவர்கள்.

மலைக்காடுகள் என்ன ஆயின?

அழிக்கப்பட்டன; விரைந்து அழிக்கப்பட்டன; இமாலயக் காடுகள் முதல், பொதிகை மலைக்காடுகள் வரை, மொட்டை அடிக்கப்பட்டன.

சூளைக் கல்லும் பிடாரியானால், எவரைக் குறை சொல்ல? வெட்டப்பட வேண்டிய முதிர் மரங்கள் அய்யாயிரத்தை வெட் உரிமம் பெறுவது; வழிநெடுக வாய்க்கரிசி போட்டுவிட்டு, பதினையாயிரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு போவது.

குடியாட்சியை ஏற்படுத்திக் கொண்ட நாள்முதல், எல்லாப் பக்கங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு, காடுகளை அழித்து விட்டோம்.

நம்மவரிடையே பணம் பெருகிற்று; நீர் வற்றிற்று. இப்போக்கு நீடித்தால், நீரைத் தேடித் தென் கடலுக்குத்தான் செல்லவேண்டும்.

நம் செல்வத்தைக் கொள்ளை கொண்டு போவதையே குறிக்கோளாகக்கொண்டு வந்தவர்.ஆங்கிலேயர்: கடல் கடந்து வந்தவர் வெள்ளையர்; அவர்கள்கூட, அழிக்காத காடுகளை-நம் காடுகளை நாம் அழித்துவிட்டோம்.

வனவளம் இருந்தால்தான் மழை வளம் இருக்கும். மழை வளம் நீர் வளத்தை உறுதி செய்யும்; நீர் வளம் விளைச்சல் வளத்தை வளர்க்கும்; பெருக்கும்.

விளைச்சல் செழிப்பே செல்வச் செழிப்பிற்கு அடிப்படை, செல்வச் செழிப்பு, தங்கள் தொடர் குவியலுக்குத் துணை.

இது அயலவருக்குத் தெரிந்தது; நம்மவருக்குத் தெரியவில்லை. தெரிவிப்பாரும் இல்லை.

பொன்முட்டை இடும் வாத்துகளைப் போட்டி போட்டுக் கொண்டு வெட்டி வீழ்த்திவிட்டோம்.

இருக்கும் சொற்பக் காடுகளையாவது காப்பாற்ற முயல்வோம். நீர் நிலைகள், காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த,

கண்மாய்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் என்ன ஆயின?

மக்கள் மனம்போல், மேடிட்டு, வறண்டு கிடக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/242&oldid=623145" இலிருந்து மீள்விக்கப்பட்டது