பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நினைவு அலைவ.

‘அப்புறம், அவை யெல்லாம் மூட்டைப்பூச்சிக் கடிகளாகவே, சாதாரன கொசுக்கடிகளாகவே நின்று விடும் ‘ என்று சின்னைய பிள்ளை அறிவுரை கூறினார்.

பச்சைப் புண்ணுக்கு இட்ட மாமருந்தாக அவ்வுரை பயன்பட்டது அவர் கூறியபடியே, இயக்குநருக்குப் பதில் எழுதிவிட்டேன். வ குத்தல், அதோடு நின்றுவிட்டது.

சின்னையா பிள்ளையின் அறிவுரை

தெலுங்கு மொழித் தேர்ச்சி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதான். என்னுடைய ‘பிரபேசனை நிறைவாக முடித்து, என்னைப் பதவியியல் உறுதிப்படுத்துவதில் காலதாமதமாயிற்று.

எனினும் மகிழ்ச்சியூட்டும் பதவி உறுதி ஆனை மதுரையின் இருக்கையில் வந்து சேர்ந்தது.

மாவட்ட அலுவலராகத் தொடங்கிய நாள் முதல் பதவியில் உறு:. செய்யப்பட்டேன்.

ஊதியத்தைப் பொறுத்த மட்டில் எனக்கு உதவியான ஆணை

1942 இல் நான் பதவியேற்றபோது, தொடக்க சம்பளம் 190 ரூபா மட்டும்.

‘நான்கு திங்களில், ஈராண்டு முடியும்; ஆகவே 25 ரூபா உயர்வு பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், ஊதிய மாற்று அறிவிப்பு வந்தது.

அதன்படி, மாவட்டக் கல்வி அலுவலரின் தொடக்க ஊதியம் 200 ரூபா, இப்போது முந்தைய பணிக்கு என்று சில நிலை ஊதிய உயர்வுவரை கொடுப்பது உண்டு.

கருமிகள் காலத்தில் பணி புரிந்த எங்களுக்கு, நான்காண்டு முன் பணி இருந்தால்தான், ஒரு உயர்வு உண்டு. அதற்குக் குறைந்தால் உயர்வு கிடையாது. அதன் பொருள் என்ன?

அய்ந்து திங்களுக்குப்பின் திங்கள் ஊதியம் 215 ரூபா எதிர்பார்த்த எனக்கு 200 ரூபா மட்டுமே

அய்ந்து திங்கள் முன்னதாக 10 ரூபா உயர்வு பெற்றது பின்வர் வரவேண்டிய 25 ரூபாய் ஏற்றத்தைத் தட்டிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/248&oldid=623151" இலிருந்து மீள்விக்கப்பட்டது