பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவு அலைகள்

கார் வாங்கினேன்

சேர்த்து வைத்த பணம், பொருத்தமான வேளை என் கைக்கு வந்தது எப்படி? அப்போது பழைய கார் ஒன்று வாங்கினேன்.

மதுரையில் சக்ரபாணி செட்டியார் கம்பெனி’ என்ற பெயரில் ஒரு கார் சாமான் கடை இருந்தது. அதன் முதலாளி, போர்ட் வி. 8 கா வைத்து இருந்தார். ஒரே ஒட்டி ஒட்டியதால் அது நல்ல நிலையில் இருந்தது.

சர். பி.டி. இராசன் அவர்கள் அதை எனக்குப் பேசி முடித்தார். அதன் விலை 2500 ரூபாய் ஆகும். அத்தொகையைக்கட்டி வண்டியை எடுத்து கொள்ளப் பத்துநாள் தவணை கொடுத்திருந்தார்.

அவ்வேளை பணம் கிடைத்தது. மதுரையில் என் வீட்டிற்குப் பக்கத்தில், ஒர் அரசு அலுவலா குடியிருந்தார். அவர் கார் வைத்திருந்தார்.

அவரது காரோட்டிக்குத் திங்கள் ஊதியம் 25 ரூபாய்.

நான் கார் வாங்கப்போகிறேன் என்று கேள்விப்பட்டதும் அந்த அா அலுவலர் என்னோடு பேசினார்.

நீண்ட அனுபவமுடைய தன் காரோட்டியை, கூடுதலாக அய்ந்து ரூபாய் கொடுத்து, வேலைக்கு எடுத்துக் கொள்ளும்ப பரிந்துரைத்தார்.

அப்படியே செய்தேன்.

அந்தக் காரோட்டி, என் வண்டியை எடுத்ததும் முதலில் பி. இராசன் பங்களாவிற்குச் சென்றேன்.

அப் பெரியவர் என் காரோட்டியின் கடந்த காலத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்; நம்பிக்கைக்குரியவர் என்று நினைவு கொண்டபின், -

‘'கார் எவ்வளவு அதிகம் ஒடும் என்று சோதிக்காதே எவ்வளவு பாதுகாப்பாகக் கொண்டு போகலாமென்பதிலேயே கருத்தாயிரு நிதானமாக ஒட்டு’ என்று காரோட்டிக்கு அறிவுரை கூறினார். என்னைப் பார்த்து, -

‘போக வேண்டிய தொலைவு எவ்வளவு? முப்பது மைல் வேகத்தி. சென்றால், எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கணக்குப் பார்த்து கொண்டு, அரை மணி கூடுதலாக விட்டு, முன்னதாக வ புறப்பட்டுவிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/250&oldid=623154" இலிருந்து மீள்விக்கப்பட்டது