பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நினைவு அலைகள்

காவல்துறை புலனாய்ந்து, மேலும் சில சிறு ஊழல் குற்றங்களைச் சேர்த்து அறிக்கை அளித்தது.

அது, ஊழல் ஒழிப்பு மன்றத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

முடிவு? பட்டிவீரன் பட்டியில் கொடுத்த கையூட்டு மட்டுமே மெய்ப்பிக்கப் பட்டதாக, திரு. முகமது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

அது அநீதி.

‘நான், எனக்குத் தெரிந்த தகவலைத் துணிந்து வலியக் கூறியிருந்தால் அவருக்கு அந்த அநீதி விளைந்திருக்காதே. என்னைப் போன்ற கோழைகள் நிறைந்த நாட்டில், நீதிதேவன் அடிக்கடி மயக்கம் போட்டுச் சாய்வான் என்பதை உணரும் முதிர்ச்சி அன்று இல்லை.

ஏழெட்டு ஆண்டுகளுக்குப்பின், சென்னைக்கு வந்த திரு. முகமது என் அலுவலகம் வந்தார். இயக்குநர் பதவி பெற்று இருப்பது பற்றி என்னைப் பெரிதும் பாராட்டினார்.

உங்கள் வேலை நீக்கம் அநீதியானது. அதன்மேல் அரசுக்கும். கருணை மனு போடுங்கள். நான் என்னாலான உதவி செய்கிறேன் என்றேன்.

‘சரி என்று பதில் கூறினார். ஆனால் அப்படிச் செய்யவில்லை. திரு. முகமதுவின் மேல், ஒப்பனை செய்த கூற்றின் அடிப்படையில், அவர் கண்டிக்கப்பட்டபோது, என் சிந்தனை பின்னோக்கிப் பறந்தது.

கருப்புச் சட்டை மாநாடு

1946 ஆம் ஆண்டு மே திங்கள் மதுரையில், வைகை ஆற்றுப் படுகையில் கருஞ் சட்டைப்படை மாநாடு கூடிற்று. எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு மக்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

முதலில் நீண்ட, பெரிய ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தது. முதல் நாள் மாநாட்டு உரைகள் சிறப்பாக அமைதியாக அமைந்தன.

இரண்டாம் நாள் முற்பகல், மாநாடு தாக்கப்பட்டது; பந்தல் முழுவதும் கொளுத்தப்பட்டது.

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களைக் காப்பாற்றி அனுப்புவது காவல் துறைக்குப் பெரும்பாடாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/254&oldid=623158" இலிருந்து மீள்விக்கப்பட்டது